

டி.கே.பிரபு
காரைக்குடி: காரைக்குடி தொகுதியிலிருந்து முதல் முறையாக அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சிவகங்கை மாவட் டத்தில் காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய 4 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் சிவகங்கை தொகுதியில் எம்எல்ஏக்களாக இருந்த தா.கிருஷ்ணன், ஜி.பாஸ்கரன் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.
அதேபோல், திருப்பத்தூர் தொகுதியில் எம்எல்ஏக்களாக இருந்த மாதவன், ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன், கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.
காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் 1952-ம் ஆண்டிலிருந்து 2021 வரை 16 எம்எல்ஏக்கள் இருந்துள்ளனர். ஆனால், இதுவரை ஒருவர்கூட இத்தொகுதியிலிருந்து அமைச்சராக நியமிக்கப்படவில்லை.
இந்த முறை தவெக எம்எல்ஏவாக தேர்வாகியுள்ள டி.கே.பிரபு (42), அமைச்சராக இடம்பெற்றுள்ளார். முதல் முறையாக அமைச்சர் கிடைத்துள்ளதால், இத்தொகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
டி.கே.பிரபு தேவகோட்டை அருகே இருமதியைச் சேர்ந்தவர். காரைக்குடியில் பல் மருத்துவராக உள்ளார். இவரது தந்தை துரை.கருணாநிதி முன்னாள் ராணுவ வீரர். தாயார் சரஸ்வதி, தேவகோட்டை முன்னாள் ஒன்றியத் தலைவர். மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். தவெக கிழக்கு மாவட்டச் செயலாளராகவும் உள்ளார்.