

திருவள்ளூர்: அமோனியா வாயுக் கசிவு விபத்து ஏற்பட்ட கன்னிகைப் பேர் தனியார் நிறுவனத்தில் அமோனியா வாயு அகற்றும் பணி நேற்று தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்டம், பெரிய பாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தனியார் நிறுவனத்தில் கடந்த மாதம் 21-ம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட 83 பேரில், கடந்த 2-ம் தேதி இரவு வரை 18 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னையில் உள்ள 4 மருத்துவமனைகளில் 51 பேர் சிகிச்சை பெற்று, தங்குமிடத்துக்கு திரும்பினர். மற்ற 14 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், விபத்து நடந்த தனியார் நிறுவனத்தின் சேமிப்பு தொட்டிகளில் உள்ள சுமார் 2 டன் அமோனியா வாயுவை பாதுகாப்பான முறையில் 15 பேர் அடங்கிய தொழில்நுட்ப வல்லுநர் குழு, தனியார் நிறுவன தொழில்நுட்ப குழு, தொழிலகங்கள், கட்டுமான தளங்களின் பாதுகாப்பு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மூலம் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இரு நாட்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள இப்பணி நேற்று காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது.
தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறையின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு நடைபெற்ற இப் பணியின் தொடக்கத்தில் லேசான அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது. அதனை உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர் குழுவினர் சரி செய்தனர்.
வாயு அகற்றும் பணியில் சுமார் பிறகு தொடர்ந்த அமோனியா 85 சதவீதம் அமோனியா வாயு தொட்டிகளில் இருந்து அப் புறப்படுத்தப்பட்டு டேங்கர் லாரிக்கு மாற்றப்பட்டது. மீதமுள்ள அமோனியா வாயுவை அகற்றும் பணி இன்று காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது.
பணிக்காக, தனியார் நிறுவனத் அமோனியா வாயு அகற்றும் தில் இருந்து 500 மீட்டர் சுற்றளவு பகுதிகள் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் (716) தடை செய்யப்பட்ட பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தனியார் நிறுவனத்தையொட்டி 300 மீட்டருக்கு வெளியே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள், அமோனியா வாயு அகற்றும் பணியை வேடிக்கை பார்க்க வரக் கூடாது என ஏற்கெனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் அறி வுறுத்தப்பட்ட நிலையில், மக்கள், பைக்குகள், கார்கள், ஆட்டோக்கள் தனியார் நிறுவனம் அமைந்துள்ள, சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்துக்குள் வராமல் தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாயு அகற்றும் பணி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நேற்று திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு மின்னணு வியல் கழக நிர்வாக இயக்கு நருமான கே.பி.கார்த்திகேயன், ஆட்சியர் கவிதா ஆய்வு செய்து பாதுகாப்பு வழிகாட்டி நெறி முறைகளை பின்பற்ற அதிகாரி களுக்கு அறிவுறுத்தினர்.