மதுரையில் மகிழ்ச்சி வெள்ளம் | மகளிர் திருவிழா

மதுரையில் மகிழ்ச்சி வெள்ளம் | மகளிர் திருவிழா
Updated on
2 min read

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பாக மகளிர் திருவிழா மதுரை தெப்பக்குளம் காமராசர் சாலையில் உள்ள தியாகராசர் கல்லூரியில் ஜூன் 28 அன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற வாசகியர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அந்த நாளை அர்த்தமுள்ளதாக்கினர்.

காக்கும் சட்டங்கள்: பெண்களுக்குச் சட்ட விழிப்புணர்வு குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அரசு வழக்கறிஞர் (உரிமையியல்) கே.ஆர்.சிவசங்கரி பேசினார். பெண் சிசுக்கொலை தடுப்புச் சட்டம், குழந்தைகளைப் பாலியல் வன்கொடுமையிலிருந்து காக்கும் போக்சோ சட்டம், பணியிடப் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து பெண்களைக் காக்கும் சட்டம் எனப் பல்வேறு சட்டங்கள் குறித்தும் அவற்றைப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகளையும் அவர் விளக்கினார்.

<div class="paragraphs"><p> கே.ஆர்.சிவசங்கரி,&nbsp;எஸ்.வனிதா</p></div>

கே.ஆர்.சிவசங்கரி, எஸ்.வனிதா

மேலும், “திருமணத்துக்குப் பிறகு பெண்கள் வரதட்சிணைக் கொடுமையாலும் குடும்ப வன்முறையாலும் பாதிப்படைவதைத் தடுக்கவும் சட்டங்கள் உண்டு. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர்கள் என யாராக இருந்தாலும் கணவனிடமிருந்து பராமரிப்பு நிதி உதவி பெறலாம். பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை உண்டு. திருமணம் முடிந்ததுமே உடனடியாகக் கருவுற வேண்டும், குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமில்லை. அது பெண்களின் விருப்பத்தைப் பொறுத்தது. திருமணமான பெண்கள் கணவனின் அனுமதியின்றிக் கருக்கலைப்பு செய்து கொள்ளவும் சட்டத்தில் வழி வகை உண்டு” என்று கூறினார்.

விடாமுயற்சி வெற்றி தரும்: வெற்றிலை வியாபாரத்திலும் வெற்றி பெறலாம் என நிரூபித்துவரும் மதுரை தொழில்முனைவோர் எஸ்.வனிதா நாச்சியார், “செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். அதுபோல் வணிகத்தில் சிறிய தொழில், பெரிய தொழில் என்கிற வேறுபாடு இல்லை. விடாமுயற்சியுடன் தொடர்ந்து செய்தால் சிறிய தொழிலும் பெரிய தொழிலாகும் என்பதற்கு வெற்றிலை பீடா தொழிலும் ஒரு உதாரணம். என் மாமனார் 70 ஆண்டுக்கு முன்பு செய்த சிறிய தொழிலைத் தொடர்ந்து நடத்தி வெற்றிபெற்றிருக்கிறோம். எங்களது கடையில் கல்லூரி மாணவ, மாணவியர் பகுதிநேரமாகப் பணியாற்றுகின்றனர். அதில் பலர் தொழிலைக் கற்றுக்கொண்டு தொழில் முனைவோர் ஆகியுள்ளனர்” என்றார்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in