தமிழகம், புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக அமித் ஷா வருகை

அமித் ஷா

அமித் ஷா

Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்​சேரி காவல் துறைக்கு குடியரசுத் தலை​வரின் உயரிய வண்ண விருது அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. காவல் துறை​யின் நீண்டகால சிறப்​பான சேவை, ஒழுக்​கம் மற்​றும் மக்​கள் பாது​காப்​பில் இத்​துறை ஆற்​றிய பங்​களிப்பை அங்​கீகரிக்​கும் வகை​யில் இந்த உயரிய விருது புதுச்​சேரி காவல் துறைக்கு வழங்​கப்​படு​கிறது.

இதற்​கான விழா புதுச்​சேரி கோரிமேட்​டில் உள்ள காவல் மைதானத்​தில் வரும் 9-ம் தேதி நடை​பெறுகிறது. இந்த விருதை வழங்க மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா வரும் 8-ம் தேதி (சனிக்​கிழமை) புதுச்​சேரி வரு​கிறார். அன்​றைய தினம் மாலை சென்​னை​யில் இருந்து ஹெலி​காப்​டர் மூலம் புதுச்​சேரி விமான நிலை​யம் வரு​கிறார். துணைநிலை ஆளுநர் கைலாஷ்​நாதன், முதல்​வர் ரங்​க​சாமி, அமைச்​சர்​கள், எம்​எல்​ஏக்​கள் அவரை வரவேற்​கின்​றனர்.

புதுவையில் இரவு தங்​கும் அவர் மறு​நாள் 9-ம் தேதி கோரிமேடு மைதானத்​தில் நடை பெறும் விழா​வில் பங்​கேற்​கிறார்.புதுச்​சேரி காவல்​துறைக்கு வண்ண விருதை வழங்கி உரை​யாற்​றிய பின்​னர் அங்​கிருந்து புறப்​பட்டு புதுச்​சேரி விமான நிலை​யம் வந்​து, ஹெலி​காப்​டர் மூலம் திரு​வண்​ணா​மலைக்​குச் சென்று அங்கு ரமண மகரிஷி ஆசிரமத்தை பார்​வை​யிடு​கிறார்.

அதன்​பின் அங்​கிருந்து ஹெலி​காப்​டர் மூலம் சென்னை வந்து விமானம் மூலம் டெல்லி செல்​கிறார். அமைச்​சர் அமித் ஷா வரு​கையையொட்டி புதுச்​சேரி​, திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்றன. புதுச்​சேரி நிகழ்வானது ஏற்​கெனவே கடந்த ஜூலை 25-ம் தேதி நடத்த திட்​ட​மிடப்​பட்​டிருந்​தது. அப்​போது நீட் தேர்​வுக்கு எதி​ராக டெல்​லி​யில் நடந்த போராட்​டங்​கள் தீவிரமடைந்த நிலை​யில், அமித் ஷாவின் தமிழகம், புதுச்​சேரி வருகை ரத்து செய்​யப்​பட்​டது குறிப்​பிடத்​தக்​கது.

<div class="paragraphs"><p>அமித் ஷா</p></div>
அண்ணன் சீர் முதல் ‘வெற்றி’ திட்டங்கள் வரை: தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in