“அசாமில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம்” - அமித் ஷா உறுதி

அசாம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தின் கோல்பாரா நகரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். பாஜக வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டினார். படம்: பிடிஐ

அசாம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தின் கோல்பாரா நகரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். பாஜக வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டினார். படம்: பிடிஐ

Updated on
1 min read

குவாஹாட்டி: அ​சாமில் பொது சிவில் சட்​டம் கொண்டு வரப்​படும். இதன் மூலம் ஊடுரு​வல்​காரர்​கள் 4 முறை திரு​மணம் செய்து கொள்​வது தடுக்​கப்​படும் என்று மத்​திய அமைச்​சர் அமித் ஷா கூறி​னார்.

அசாம் சட்​டப்​பேர​வைக்கு ஒரே கட்​ட​மாக வரும் 9-ம் தேதி தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்டி அசாமின் கோல்​பாரா மாவட்​டம் துத்​னோ​யில் பாஜக சார்​பில் நேற்று நடை​பெற்ற பொதுக் கூட்​டத்​தில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்று பேசி​ய​தாவது: அசாமில் பழங்​குடி​யினர் மேம்​பாட்​டுக்​காக பிரதமர் நரேந்​திர மோடி​யும், முதல்​வர் ஹிமந்தா பிஸ்வா சர்​மா​வும் ஒரு விரி​வான செயல்​திட்​டத்தை தயாரித்​துள்​ளனர். இங்கு பாஜக மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால்​தான் அதன் முழு​மை​யான அமலாக்​கம் சாத்​தி​ய​மாகும். எனவே நீங்​கள் பாஜக​வுக்கு வாக்​களிக்க வேண்​டும்.

பிரதமர் மோடி​யின் தலை​மை​யில்​தான் நமது நாடு தனது முதல் பழங்​குடிப் பெண் குடியரசுத் தலை​வரை பெற்​றது. காங்​கிரஸ் ஒரு​போதும் ஒரு பழங்​குடிப் பெண்ணை நாட்​டின் குடியரசுத் தலை​வ​ராக்​கிய​தில்லை. ஆனால் பிரதமர் மோடி அதை மாற்​றி​னார். திரௌபதி முர்மு நாட்​டின் முதல் குடிமகன் ஆனார்.

அசாமில் பொது சிவில் சட்​டத்தை நாங்​கள் கொண்டு வரு​வோம். இந்த சட்ட வரம்​பில் இருந்து பழங்​குடி​யினருக்கு விலக்கு அளிக்​கப்​படும். ஊடுரு​வல்​காரர்​கள் நான்கு முறை திரு​மணம் செய்​து​கொள்​ளாமல் இருப்​பதை பொது சிவில் சட்​டம் உறுதி செய்​யும்.

அண்டை மாநில​மான மேகால​யா​வில் சமீபத்​தில் வன்​முறை ஏற்​பட்​டது. ஊடுரு​வல்​காரர்​கள் பழங்​குடிப் பெண்​களை திரு​மணம் செய்து கொண்டு காரோ மலை தன்​னாட்சி மாவட்ட கவுன்​சிலில் அரசி​யல் செல்​வாக்கு பெற முயன்​றனர். இதுவே அங்கு மோதலுக்கு வழி​வகுத்​தது.

ஊடுரு​வலை தடுக்க உறு​தி​: இங்கு பாஜக மீண்​டும் ஆட்​சிக்கு வந்​தால் சட்​ட​விரோத ஊடுரு​வலை தடுக்க உறு​தி​யான நடவடிக்கை எடுக்​கும். நாங்​கள் அசாமில் அமை​தியை கொண்டு வந்​துள்​ளோம். இங்கு காங்​கிரஸ் சில இடங்​களை வென்​றால்​கூட, மாநிலத்​தில் மீண்​டும்​ ஸ்திரமின்​மை ஏற்​படும்​. இவ்​வாறு அமித்​ஷா பேசி​னார்​.

<div class="paragraphs"><p>அசாம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தின் கோல்பாரா நகரில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார். பாஜக வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவு திரட்டினார். படம்: பிடிஐ</p></div>
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in