புதுச்சேரி திமுக சட்டமன்ற கட்சித்தலைவராக நாஜிம் நியமனம்

எதிர்க்கட்சித் தலைவராக தேர்வாகிறார்
புதுச்சேரி திமுக சட்டமன்ற கட்சித்தலைவராக நாஜிம் நியமனம்
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி திமுக சட்டமன்றக் கட்சித்தலைவராக நாஜிம் எம்எல்ஏ நியமிக்கப்பட்டுள்ளார். அவர் எதிர்க்கட்சித் தலைவராகிறார்.

புதுவையில் மீண்டும் என்டிஏ ஆட்சி அமைகிறது. சட்டப்பேரவைத் தேர்தலில் 13 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதனால் திமுக எதிர்க்கட்சியாகிறது.

காரைக்கால் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வென்ற நாஜிம் எம்எல்ஏ, புதுச்சேரி திமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக செந்தில் குமாரும், கொறடாவாக செந்தில், செயலராக கார்த்திகேயன், பொருளாளராக விக்னேஷ் கண்ணன் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். இதில் சட்டமன்ற கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நாஜிம் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்பார்.

தேர்தல் முடிவுகள்: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்ஆர் காங்கிரஸ் 12 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும், அதிமுக ஒரு தொகுதியிலும், லட்சிய ஜனநாயகக் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. மொத்தம் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலம் இக்கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்த தேர்தலில் திமுக 5 தொகுதிகளிலும், தவெக 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும், நேயம் மக்கள் கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. சுயேட்சைகள் மூன்று பேர் வெற்றி பெற்றனர்.

புதுச்சேரி திமுக சட்டமன்ற கட்சித்தலைவராக நாஜிம் நியமனம்
நெல் மூட்டைகளை தாமதமின்றி கொள்முதல் செய்க: முதல்வர் விஜய்க்கு அன்புமணி கோரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in