விசிகவின் கூட்டணி மாற்றத்தால் திறக்கப்படாமல் உள்ள அம்பேத்கர் சிலை

கள்ளக்குறிச்சியில் பழைய அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபடியே, அருகில் உள்ள புதிதாக உருவாக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள அம்பேத்கர் சிலையை பார்வையிடும் திருமாவளவன் எம்.பி.

கள்ளக்குறிச்சியில் பழைய அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபடியே, அருகில் உள்ள புதிதாக உருவாக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள அம்பேத்கர் சிலையை பார்வையிடும் திருமாவளவன் எம்.பி.

Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் சாலை விரிவாக்கத்தின்போது, சாலையோரம் இருந்த அம்பேத்கர் சிலை சேதமடைந்தது. அதனால், அதை அகற்றி வேறு இடத்தில் வைக்கும் கட்டாயம் ஏற்பட்டது.

அப்போது திமுக கூட்டணி யில் விசிக அங்கம் வகித்த நிலையில், திமுக மற்றும் விசிக நிர்வாகிகள் சேர்ந்து, தற்போது இருக்கும் சிலையின் அருகே புதிய சிலை ஒன்றை அமைக்க முடிவு செய்தனர். சிலைக்கான செலவை திமுக மாவட்டச் செயலாளரும், ரிஷிவந்தியம் எம்எல்வுமான வசந்தம் கார்த்திக்கேயன் ஏற்றார்.

புதிய சிலையின் பீடத்தில் உள்ள மூன்று புறம் உள்ள கல்வெட்டுகளில் சிலை ஏற்பாட்டாளர்களான திமுக, விசிக நிர்வாகிகளின் பெயர்கள் பொறிக்கப்பட்டது. சட்டப்பேரவை தேர்தல் முடிந்தவுடன் சிலை திறப்பது என முடிவு செய்யப்பட்டது. அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தவெக கூட்டணிக்கு விசிக சென்றது.

இதனால் திமுகவுடன் சேர்ந்து அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை திறக்க முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில். கட்சிப் பிரமுகரின் இல்ல நிகழ்ச்சிக்காக நேற்று கள்ளக்குறிச்சி வந்திருந்த திருமாவளவன் எம்.பி, கள்ளக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே இருக்கும் பழைய அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனருகே மூடப்பட்ட நிலையில் இருந்த புதிய அம்பேத்கர் சிலை குறித்து கட்சியினர் திருமாவளவனிடம் எடுத்துக் கூறினர். திமுக எம்எல்ஏ பங்களிப்பில் அச்சிலை உருவாக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினர், அதைக் கேட்டுக் கொண்ட திருமாவளவன் சிலையை கூர்ந்து கவனித்துவிட்டு, எந்த பதிலும் கூறாமல் அங்கிருந்து சென்றார்.

மக்களின் கருத்து அறிந்து..

பின்னர், தியாகதுருகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விரிவாக கருத்து கேட்கப்பட வேண்டும். அவர்களின் கருத்துகளை அறிந்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்” என்றார்.

‘தமிழகத்தில் யாருடைய தயவிலும் ஆட்சி நடைபெறவில்லை. மக்களின் தயவில் நடைபெறுகிறது’ என அமைச்சர் ராஜ்மோகன் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “மக்கள், தவெகவுக்கு பெரும்பான்மை இடங்களை வழங்கி வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் ஆட்சி அமைக்க காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவளித்து கைகோர்த்துள்ளது.

மக்கள் அளித்த பெரும்பான்மையை மையப்படுத்தியே அமைச்சர் அவ்வாறு கூறியிருப்பார். தோழமைக் கட்சிகளின் ஆதரவை புறந்தள்ளும் நோக்கில் அவர் பேசியிருக்க வாய்ப்பில்லை” என்றார். ‘தவெக ஆட்சியில் ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு’ என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்த விமர்சனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இது எதிர்க்கட்சியின் கருத்து” என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

<div class="paragraphs"><p>கள்ளக்குறிச்சியில் பழைய அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தபடியே, அருகில் உள்ள புதிதாக உருவாக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ள அம்பேத்கர் சிலையை பார்வையிடும் திருமாவளவன் எம்.பி.</p></div>
பண மோசடி வழக்கு: சென்னை வழக்கறிஞரை பழநியில் கைது செய்தது சிபிசிஐடி போலீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in