வேளாண் பட்ஜெட் 2026-27: எஸ்சி, எஸ்டி விவசாயிகள் பயன்பெற அம்பேத்கர் வேளாண் உதவி திட்டம்

வேளாண் பட்ஜெட் 2026-27: எஸ்சி, எஸ்டி விவசாயிகள் பயன்பெற அம்பேத்கர் வேளாண் உதவி திட்டம்
Updated on
2 min read

ஆதி​தி​ரா​விடர் (எஸ்​சி) மற்​றும் பழங்​குடி​யின (எஸ்​டி) விவ​சா​யிகள், அரசின் திட்​டப் பலன்​களை தடை​யின்றி அடைய​வும், நீரா​தா​ரங்​களை உரு​வாக்கி உற்​பத்​தியை அதி​கரிக்​க​வும், அவர்​களின் வாழ்க்​கைத் தரத்தை மேம்​படுத்​த​வும் அண்​ணல் அம்​பேத்​கர் வேளாண் உதவி திட்​டம் செயல்​படுத்​தப்​படும்.

இத்​திட்​டத்​தில், மேற்​கண்ட விவ​சாய பயனாளி​கள், உயர் மதிப்பு வேளாண் திட்​டங்​களில் செலுத்த வேண்​டிய பங்​குத் தொகை​யில் கூடு​தலாக 20 சதவீத மானி​யம் வழங்​கப்​படும்.

நிழல் வலைக்​குடில்​கள், சூரிய கூடார உலர்த்​தி​கள், மதிப்​பு​கூட்​டும் இயந்​திரங்​கள், ஒருங்​கிணைந்த பண்​ணை​யம், பசுமை குடில்​கள், பண்ணை இயந்​திரங்​கள் போன்​றவற்​றுக்கு 70 சதவீத மானிய​மும் சூரிய சக்தி பம்​ப்செட்​கள் அமைக்க 80 சதவீத மானிய​மும் வழங்​கப்​படும்.

நீர்ப்​பாசன வசதி​யில்​லாத 300 ஆதி​தி​ரா​விட, பழங்​குடி​யின விவ​சா​யிகளின் புன்​செய் நிலங்​களில் நீர்ப்​பாசன ஆதா​ர​மாக ஆழ்​துளை அல்​லது குழாய் கிணறுகள் 100 சதவீத மானி​யத்​தில் மின் மோட்​டார் அல்​லது சூரிய சக்தி பம்​ப்செட்​களு​டன் அமைக்​கப்​படும். இத்​திட்​டத்​துக்​காக நடப்​பாண்​டில் ரூ.56.72 கோடி ஒதுக்​கப்​படும்.

கால்நடை, மீன், தேனீ வளர்ப்புக்கு ரூ.3,000 கோடி குறுகிய கால கடன்

கால்​நடை, மீன், தேனீ வளர்ப்பு உள்​ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்​கைகளுக்​கான உழவர்​களின் குறுகிய கால தேவைக்கு ரூ.3,000 கோடிக்கு மூலதனக் கடன் வழங்​கப்​படும்.விளைபொருள் வீணாவதை தடுக்க ரூ.10 கோடி​யில், 43,500 விவ​சா​யிகளுக்கு தார்ப்​பாய்​கள் வழங்​கப்​படும்.

ரூ.2.80 கோடி​யில் தனி​நபர் விவ​சாய நிலங்​களில் 100 கதிரடிக்​கும் களங்​கள் அமைக்​கப்​படும். ரூ.23.06 கோடி​யில் 1,000 விவ​சா​யிகளுக்கு சூரிய சக்தி பம்ப்​செட் அமைக்​கும் திட்​டம் செயல்​படுத்​தப்​படும். ரூ.23 கோடி​யில் தமிழ்​நாடு விவ​சா​யிகள் வரு​மான மேம்​பாட்டு ஆணை​யம் அமைக்​கப்​படும்.

ரூ.20 கோடி​யில் உழவர் சந்​தைகள் சீரமைக்​கப்​படும். 1,000 எருமை கிடேரிக் கன்​றுகளுக்​கும், சினை​யாக உள்ள 1,000 எரு​மை​களுக்​கும் ஊட்​டச்​சத்து ஆதரவு வழங்க ரூ.2.04 கோடி ஒதுக்​கப்​படும்.

மண்வளத்தை பாதுகாக்க சிறப்பு இயக்கம்

மண்​ணில் நுண்​ணு​யிர்​களின் எண்​ணிக்​கையை அதி​கரித்​தல், களர், உவர் நிலங்​களை சீர்​படுத்​துதல், ரசாயன உரங்​களின் பயன்​பாட்​டைக் குறைத்​தல், இயற்​கை, உயிர்ம வேளாண் முறை​களை ஊக்​கு​வித்​தல் ஆகிய செயல்​பாடு​களை மேற்​கொண்டு வளமான தமிழ் மண்ணை வருங்​காலம் காண ஐந்​தாண்டு திட்​ட​மாக ‘தமிழ்​நாடு மண்​வளப் பாது​காப்பு இயக்​கம்’ ரூ.600 கோடி​யில் இந்த ஆண்டு அறி​முகம் செய்​யப்​படும்.

இதன்​கீழ் 22 ஆயிரம் ஏக்​கருக்கு தேவை​யான பசுந்​தாள் உர விதைகள் மானிய விலை​யில் வழங்​கப்​படும். வளர்ந்த பசுந்​தழைகளை நிலத்​திலேயே மடக்கி உழு​வதற்கு ஏக்​கருக்கு ரூ.3 ஆயிரம் உழவு மானியம் வழங்​கப்​படும். இதற்கு ரூ.63.50 கோடி ஒதுக்கீடு.

நிரந்தர மண்​புழு உரக்​கூடங்​கள் ரூ.10 கோடி​யில் அமைக்​கப்​படும். வளம் குறைந்த நிலங்​களை மீட்​டெடுக்க, மண் சீர்​திருத்​தம் குறித்து 2 ஆயிரம் ஏக்​கரில் ரூ.2 கோடி​யில் செயல் விளக்​கம் மேற்​கொள்​ளப்​படும்.

விதைப் பண்​ணை​கள் அமைத்து 7,730 டன் சான்று நெல் விதை உற்​பத்தி செய்​து, தமிழ்​நாடு மாநில விதை மேம்​பாட்டு முகமைக்கு வழங்​கும் விவ​சா​யிகளுக்​கு, நெல் விதை உற்​பத்தி மானிய​மும், 14,570 டன் சான்று அளிக்​கப்​பட்ட விதைகளை மானி​யத்​தில் விநியோகிக்க நெல் விதை விநியோக மானியமும் வழங்க ரூ.34.72 கோடி ஒதுக்கப்படும்.

தளிர்க் கீரை வளர்ப்பு

ப்ரக்​கோலி, முட்​டைக்​கோஸ், முள்​ளங்​கி, பச்​சைப் பட்​டாணி, கொண்​டைக்​கடலை, ஆளி விதைகள், வெங்​கா​யம், பச்​சைப்​பயறு, கொள்​ளு, எள், கோது​மை, கீரை வகைகள் ஆகிய​வற்​றின் இளம் நாற்​றுகள் ‘தளிர்க் கீரைகள்’ எனப்​படு​கின்​றன.

முதிர்ந்த செடியை​விட இவற்றில் 40 மடங்கு வரை அதிக ஊட்​டச்​சத்​து உள்​ளது. எனவே, விதைகள், நீர்த் தெளிப்பு கரு​வி, வழி​முறை கையேடு உள்ளிட்டவை அடங்​கிய 20 ஆயிரம் தளிர்க் கீரை தொகுப்​பு​களை சென்​னை, கோவை, திருச்சி போன்ற முக்​கிய நகரங்​களில் விநி​யோகிக்​கும் வகை​யில் ‘தளிர்க் கீரைகள் திட்​டம்’ ரூ.1.20 கோடி​யில் செயல்​படுத்​தப்​படும்.

தோட்​டக்​கலைப் பயிர்​களை சாகுபடி செய்ய ரூ.11.73 கோடி​யில் நிரந்தர பந்​தல் அமைக்​கும் திட்​டம், ரூ.6.25 கோடி​யில் வாழைக்கு முட்​டுக் கொடுத்​தல் திட்​டம், ரூ.16 கோடி​யில் தென்​னைக்​கான சிறப்​பு திட்​டம்​ செயல்​டுத்​த​ப்​படும்​.

வேளாண் பட்ஜெட் 2026-27: எஸ்சி, எஸ்டி விவசாயிகள் பயன்பெற அம்பேத்கர் வேளாண் உதவி திட்டம்
வேளாண் பட்ஜெட் 2026-27: உழவர் ‘ஏஐ’ முதல் ‘துளி துளி தண்ணீர்’ வரை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in