வேளாண் பட்ஜெட் 2026-27: உழவர் ‘ஏஐ’ முதல் ‘துளி துளி தண்ணீர்’ வரை

வேளாண் பட்ஜெட் 2026-27: உழவர் ‘ஏஐ’ முதல் ‘துளி துளி தண்ணீர்’ வரை
Updated on
1 min read

ரூ.2 கோடியில் உழவர் ‘ஏஐ’

விவ​சா​யிகளுக்கு செயற்கை நுண்​ணறிவு தொழில்​நுட்ப வசதி ஏற்​படுத்தி மண் வளம், பயிர் சாகுபடி குறித்த தகவல்​களை உடனுக்​குடன் வழங்க ‘உழ​வர் செயற்கை நுண்​ணறிவு (AI) திட்​டம்’ ரூ.2 கோடி​யில் செயல்​படுத்​தப்​படும்.

இதன்​படி, ஏஐ மற்​றும் இயந்​திர​வழி கற்​றலுக்கு உரிய தொழில்​நுட்​பங்​களை ஒருங்​கிணைத்​து, வானிலை முன்​னறி​விப்​பு, மண் நலம், மண் வளம், பூச்​சி, நோய் மேலாண்​மை, பரு​வநிலைக்கு ஏற்ற பயிர் என, விதைப்பு முதல் அறு​வடை வரையி​லான அனைத்து தொழில்​நுட்ப ஆலோ​சனை​களும், சேவை​களும் வழங்​கப்​படும்.

மேலும், சந்தை நில​வரம், குரல் வழி வேளாண் சேவை​கள், அரசு திட்​டங்​கள் உள்​ளிட்ட அறி​வு​சார் வேளாண் சேவை​களை​யும் விவ​சா​யிகள் தங்​கள் கைபேசி வாயி​லாக எளி​தாக பெற முடியும்.

குறு​தானிய இயக்​கம்

தமிழகத்​தில் வறட்​சியை தாங்​கும், குறைந்த நீர்த்​தேவை கொண்ட, அதிக ஊட்​டச்​சத்​து, நார்ச்​சத்​துடைய குறு​தானி​யங்​களான சாமை, தினை, வரகு, குதிரை​வாலி, பனிவரகு போன்​றவை சராசரி​யாக 61,750 ஏக்​கரில் சாகுபடி செய்​யப்​படு​கிறது.

இவற்​றின் சாகுபடி பரப்பை இரு​மடங்​காக அதி​கரிக்க, தமிழகத்​தில் 29 மாவட்​டங்​களில் ‘தமிழ்​நாடு குறு​தானிய இயக்​கம்’ ரூ.7.61 கோடி​யில் செயல்​படுத்​தப்​படும்.

நீண்ட இழை பருத்தி சாகுபடி, ஊடு​ப​யிர் சாகுபடியை ஊக்​குவிக்க ‘பருத்தி மறுமலர்ச்சி இயக்​கம்’ ஐந்​தாண்டு திட்​ட​மாக ரூ.27.21 கோடி​யில், 73,360 ஏக்​கர் பரப்​பில் செயல்ப​டுத்​தப்​படும்.

இதனால் 40 ஆயிரம் பருத்தி விவ​சா​யிகள் பயன்​பெறு​வர். அதி​கரித்து வரும் மக்​காச்​சோள தேவையை நிறைவு செய்​து, விவ​சா​யிகள் வரு​வாய் ஈட்ட, ரூ.36 கோடி​யில் ‘மக்​காச்​சோள உற்​பத்தி மேம்​பாட்டு திட்​டம்’ 3.47 லட்​சம் ஏக்​கர் பரப்​பில், 1.39 லட்​சம் விவ​சா​யிகள் பயன்​பெறும் வகை​யில் செயல்​படுத்​தப்​படும்.

ரூ.785 கோடியில் ‘துளி துளி தண்ணீர்’

நுண்​ணீர் பாசனத் திட்​டத்​தில் சிறு, குறு விவ​சா​யிகளுக்கு 100% மானிய​மும், இதர விவ​சா​யிகளுக்கு 75% மானிய​மும் வழங்கப்​படு​கிறது.

நடப்பு ஆண்​டில் 2.23 லட்​சம் ஏக்​கரில் 95 ஆயிரம் விவ​சா​யிகள் பயன்​பெறும் வகை​யில் ரூ.758 கோடி​யில் ‘நீர் மேலாண்​மைக்​கான துளித் துளித் தண்​ணீர் திட்​டம்’ செயல்​படுத்​தப்​படும்.

வேளாண் பட்ஜெட் 2026-27: உழவர் ‘ஏஐ’ முதல் ‘துளி துளி தண்ணீர்’ வரை
காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையில்லை: அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in