வாகன விற்பனையகத்தில் தகராறு: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்

வாகன விற்பனையகத்தில் தகராறு: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
Updated on: 
1 min read

கோவை: கோவை வேடபட்டி அருகே கலிக்கநாயக்கன் பாளையத்தில் மகாராஜன் என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகன விற்பனையகம் உள்ளது. இங்கு கடந்த 15-ம் தேதி இரவு வந்த வேடபட்டி நகர தவெக செயலாளர் பிரகாஷுக்கும், மகாராஜனின் மனைவி திவ்யாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதுகுறித்து திவ்யா வெளியிட்ட வீடியோவில், இளைஞரணியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி மகாராஜனிடம் பிரகாஷ் ரூ.1 லட்சம் பெற்றதாகவும், வாகனப் பதிவு தொடர்பான பிரச்சினையில் விற்பனையகத்துக்கு வந்து ரகளையில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே, வாகனப் பதிவைத் தாமதப்படுத்தி தங்களை மிரட்டியதாகக் கூறி, பிரகாஷ் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை புறநகர் வடக்கு மாவட்ட தவெக செயலாளர் வி.ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் கொள்கைகள் மற்றும் கட்டுப்பாட்டுக்கு முரணாக செயல்பட்ட வேடபட்டி நகர தவெக செயலாளர் பிரகாஷ், கட்சிப் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

வாகன விற்பனையகத்தில் தகராறு: தவெக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
ரெட்டியார்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

X