ரெட்டியார்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

ரெட்டியார்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு
Updated on: 
1 min read

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே எஸ்.வாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் நிஷ்வந்த் (13), நாகராஜன் மகன் தருண் (8), மாணிக்கம் மகன் சபரி (9) ஆகிய 3 பேரும் ஊருக்கு வெளியே உள்ள பழைய குளத்தில் குளிப்பதற்காக நேற்று மாலை சைக்கிளில் சென்றுள்ளனர்.

குளத்தில் அதிக அளவு சகதி இருந்ததால், முதலில் இறங்கிய சிறுவன் சேற்றில் சிக்கியுள்ளான். அவனை மீட்க முயன்ற மற்ற 2 சிறுவர்களும் அடுத்தடுத்து சகதியில் சிக்கி நீரில் மூழ்கினர். மாலை வெகுநேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பாததால், அவர்களது பெற்றோர் தேடியுள்ளனர்.

குளக்கரையில் சிறுவர்களின் சைக்கிள்கள் மற்றும் காலணிகள் இருப்பதைக் கண்டு குளத்தில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகித்து, திண்டுக்கல் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவி்த்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, குளத்து நீரில் மூழ்கிய 3 சிறுவர்களின் உடல்களையும் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெட்டியார்சத்திரம் அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு
பேருந்தை நிறுத்தி மதுபானம் வாங்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்: நடத்துநர் பணிநீக்கம்

X