சென்னையில் உச்ச நீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

முதல்வர் விஜய், பிரதமர் மோடி | கோப்புப்படம்

முதல்வர் விஜய், பிரதமர் மோடி | கோப்புப்படம்

Updated on: 
1 min read

சென்னை: சென்​னை​யில் உச்ச நீதி​மன்​றக் கிளை அமைக்க நட​வடிக்கை கோரி பிரதமர் மோடிக்கு முதல்​வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

இது​குறித்து நேற்று அவர் எழுதிய கடிதத்​தில் கூறியுள்​ள​தாவது: உச்ச நீதி​மன்​றக் கிளையை சென்​னை​யில் அமைக்க வேண்​டும் என்ற கோரிக்கை கடந்த 1980-ம் ஆண்​டிலேயே தமிழக அரசால் முன்​வைக்​கப்​பட்​டது. தென்​னிந்​தி​யாவின் முக்கிய பெருநகர​மான சென்​னை​யில் இக்​கிளையை அமைப்​பது, அனைத்து தென்​மாநிலங்​களுக்​கும் பயனுள்​ள​தாக அமையும்.

நமது அரசி யலமைப்​புச் சட்​டம் இயற்​றப்​பட்​டபோது, ஏழை - பணக்​காரர் என்ற பாகுபாடின்றி நாட்​டின் அனைத்​துக் குடிமக்​களும் நீதி​மன்​றத்தை நேரடி​யாக அணுகும் வாய்ப்​பைப் பெற​வேண்​டும் என்றே அதை உரு​வாக்​கிய சான்​றோர்​ விரும்​பினர். இதற்கான பிரிவு 32-ன் கீழான தீர்​வானது, புவி​யியல் ரீதி​யாக

உச்ச நீதி​மன்​றத்​துக்கு அரு​கில் வசிப்​பவர்​கள் மற்​றும் வழக்​கு, பயணச் செலவை பொருட்​டாக கருதாதவர்​களுக்கு மட்​டுமே நடைமுறை​யில் சாத்​தி​ய​மான ஒன்​றாக மாறியுள்​ளது.

இத​னால், டெல்​லிக்​கும் தென்​னிந்​திய மாநிலங்​களுக்​கும் இடையே உள்ள ​தொலைவு காரண​மாகவே இச்​சலுகையைப் பெறும் வாய்ப்பை தென்​னிந்​திய மக்​கள் இழக்க நேரிடு​கிறது.

மேலும், உச்ச நீதி​மன்​றத்​தில் தொடரப்​பட்ட வி.வசந்​தகுமார் - எச்.சி.பாட்​டியா மற்​றும் சிலர் இடை​யி​லான வழக்​கில் உச்ச நீதி​மன்​றம் 2016 ஜூலை 13-ம் தேதி பிறப்​பித்த உத்​தர​வில், எழுப்​பப்​பட்ட சட்டரீதி​யான கேள்​வி​களில், உச்ச நீதி​மன்​றத்​தின் அமர்வை அமைப்​பது என்​ப​தும்

ஒன்​றாகும். இது​குறித்து ஒரு உறுதி​யான முடிவைப் பெறு​வதற்​காக அரசி​யலமைப்பு அமர்வை அமைக்​கவும் பரிந்​துரை செய்​யப்​பட்​டுள்​ளது. அவ்​வாறே, இந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத் தலைமை நீதிபதி தலை​மையி​லான 5 நீதிப​தி​கள் அடங்​கிய அரசி​யலமைப்பு அமர்​வுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, தென்​னிந்​திய மாநிலங்​களில், சென்​னை​யின் முக்​கியத்​து​வத்​தையும், தமிழகத்​தின் நீண்​டகாலக் கோரிக்கையைக் கருத்​தில் கொண்​டும் சென்​னை​யில் உச்ச நீதி​மன்ற அமர்வை அமைப்​பது குறித்த நீதி​மன்​றத்​தின் நிலைப்​பாட்டை மறு​பரிசீலனை செய்து, சாதக​மான முடிவைப் பெற தாங்​கள் நட​வடிக்கை எடுக்க வேண்​டும். இவ்வாறு கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p>முதல்வர் விஜய்,&nbsp;பிரதமர் மோடி | கோப்புப்படம்</p></div>
அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி

X