நூலகங்களுக்கு நூல்கள் வாங்கியதில் முறைகேடு புகார்: தலைமை நூலகர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம்

நூலகங்களுக்கு நூல்கள் வாங்கியதில் முறைகேடு புகார்: தலைமை நூலகர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம்
Updated on: 
2 min read

சென்னை: நூல​கங்​களுக்கு நூல்கள் கொள்​முதல் செய்​ததில் நடந்​துள்ள முறைகேடுகள் தொடர்​பாக 2 தலைமை நூல​கர்​கள் உட்​பட 5 பேரை பணி​யிடை நீக்​கம் செய்து பொது நூல​கத் துறை பொறுப்பு இயக்​குநர் ஆர்.வி.ஷஜீவனா நட​வடிக்கை எடுத்​துள்​ளார்.

கோவை​ பெரியார் அறி​வுல​கம் நூல​கத்​துக்​குப் புத்​தகங்​கள் வாங்​கியதில் ஊழல் நடந்​திருப்​ப​தாகவும் போலியான எழுத்​தாளர்​கள் பெயரில் புத்​தகங்​கள் வாங்​கப்​பட்​ட​தாகவும் புகார் எழுந்​தது. இதேபோல் சென்னை அண்ணா நூற்​றாண்டு நூல​கம், கன்​னிமாரா நூல​கம், மதுரை கலைஞர் நூற்​றாண்டு நூல​கம் ஆகிய​வற்​றி​லும் நூல்​கள் கொள்​முதலில் முறைகேடுகள் நடந்​திருப்​ப​தாக குற்​றச்​சாட்​டுகள் எழுந்​தன.

இந்​தச் சூழலில் பொது நூல​கத் துறை இயக்​குநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்த ஐஏஎஸ் அதி​காரி எஸ்.ஜெயந்தி அந்த பொறுப்​பில் இருந்து கடந்த 8-ம் தேதி விடுவிக்​கப்​பட்​டார். அந்​தப் பொறுப்பு தமிழ்​நாடு பாடநூல் கழக மேலாண் இயக்​குநர் ஆர்.வி.ஷஜீவனாவிடம் ஒப்​படைக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுப்​பது குறித்து 9-ம் தேதி தென்​னிந்​திய புத்​தக விற்​பனையாளர் மற்​றும் பதிப்​பாளர்​கள் சங்க (பபாசி) தலை​வர் ஆர்.எஸ்.சண்​முகம் தலை​மையி​லான குழு​வினருடன் அமைச்​சர் ராஜ்மோகனை ஆலோ​சித்​தார். அப்​போது முறைகேடுகளில் தொடர்​புடைய பீனிக்ஸ், சிக்மா, அகல்​விளக்கு போன்ற பதிப்​பகங்​கள் பபாசி​யில் உறுப்​பின​ராக இல்லை என விளக்​கப்​பட்​டது.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பேசிய ராஜ்மோகன், “மாநிலம் முழு​வதும் நூல​கங்​களுக்​கான கொள்​முதல் நட​வடிக்​கைகள் தற்​காலிக​மாக நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளன. இந்த மோசடி தொடர்​பாக தமிழகம் முழு​வதும் அனைத்து நூல​கங்​களி​லும் விரிவான ஆய்வு மேற்​கொள்​ளப்​பட உள்​ளது.

லஞ்​சஒழிப்பு போலீ​ஸாரும், சர்ச்​சைக்​குரிய அகல்​விளக்கு பதிப்​பகத்​தா​ரிடம் தற்​போது விசா​ரணையை தொடங்​கி​யுள்​ளனர்” என்​றார். இந்​நிலை​யில் நூல்​கள் கொள்​முதல் தொடர்​பாக பள்​ளிக் கல்​வித் துறை சார்​பிலும் திமுக சார்​பிலும் லஞ்ச ஒழிப்பு பிரி​வில் தனித்​தனியே புகார் கொடுக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் அண்ணா நூல​கம் உள்​பட தமிழகம் முழு​வதும் நூல​கங்​களில் ஆய்வு செய்​யப்​பட்​டன.

இதில் போலி எழுத்​தாளர்​களின் பெயரில் அச்​சிடப்​பட்ட அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்​பகங்​களின் 70,674 நூல்​கள் கண்​டறியப்​பட்டு அகற்​றப்​பட்​டன. அவற்​றின் மதிப்பு ரூ.7 கோடி இருக்​கும் என கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே, கோவை பெரியார் அறி​வுல​கம் நூல​கப் புத்​தகக் கொள்​முதல் முறைகேடு வழக்​கில், நிர்​வாகப் பணிகளை மட்​டுமே மேற்​கொண்ட நூல​கர்​கள் மீது லஞ்ச ஒழிப்​புத் துறை எப்​ஐஆர் போட முயற்​சிப்​ப​தாகவும் எவ்​வித வழக்​கும் பதிவு செய்​யக் கூடாது என்​றும் நூலக ஊழியர்​கள் நலச் சங்​கம் அமைச்​சருக்கு வேண்​டுகோள் விடுத்​திருந்​தது.

இந்​தச் சூழலில் சென்னை அண்ணா நூற்​றாண்டு நூல​கத்​தின் தலைமை நூல​கர் மற்​றும் நூலக அலு​வலர் எஸ்.காமாட்சி, நூல​கர் மற்​றும் தகவல் அலு​வலர் எஸ்.சந்​தான கார்த்​தி​கேயன், மதுரை கலைஞர் நூற்​றாண்டு நூலக தலைமை நூல​கர் மற்​றும் நூலக அலு​வலர் (பொறுப்பு) தினேஷ்குமார், நூல​கர் மற்​றும் நூலக அலு​வலர் மற்​றும் கோவை பெரியார் அறி​வுல​கம் நூலக பொறுப்பு அலு​வலரான வி.சந்​தானகிருஷ்​ணன், பொது நூல​கத் துறை இயக்​ககத்​தின் தலைமை கணக்கு அலு​வலர் ஜெ.ஜூலியட் ஆகியோரை பொது நூல​கத் துறை பொறுப்பு இயக்​குநர் ஷஜீவனா பணி​யிடைநீக்​கம் செய்து உத்​தர​விட்​டுள்​ளார்.

நூலகங்களுக்கு நூல்கள் வாங்கியதில் முறைகேடு புகார்: தலைமை நூலகர்கள் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம்
அன்றாட வாழ்வில் நேர்மை, அறநெறியை கடைபிடிக்க வேண்டும்: நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அறிவுறுத்தல்

X