வெற்றிப் பயணம் திட்டம் அமலுக்கு வந்தது: அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்

சென்னை கோயம்பேட்டில் முதல்வர் விஜய் டிக்கெட் கொடுத்து தொடங்கி வைத்தார்
கோயம்பேடு பேருந்து முனையத்தில் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, மகளிருக்கு பயணச்சீட்டு  வழங்கினார். இதில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், துறை செயலர் இல.நிர்மல்ராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கோயம்பேடு பேருந்து முனையத்தில் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, மகளிருக்கு பயணச்சீட்டு வழங்கினார். இதில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், துறை செயலர் இல.நிர்மல்ராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Updated on: 
2 min read

சென்னை: தமிழகம் முழு​வதும் அரசுப் பேருந்​துகளில் பெண்​கள் இலவச​மாக பயணம் செய்​யும் வெற்​றிப் பயண திட்​டத்தை முதல்​வர் விஜய் நேற்று சென்​னை​யில் தொடங்கி வைத்​தார்.

அனைத்து அரசு பேருந்​துகளி​லும் பெண்​கள் இலவச​மாக பயணிக்​கும் திட்​டம் செயல்​படுத்​தப்​படும் என தவெக தேர்​தல் வாக்​குறுதி அளித்​திருந்​தது. அந்த வகை​யில் மகளிர் கட்​ட​ணமில்​லாப் பயணத் திட்​டத்தை விரிவுபடுத்​தி, ‘வெற்​றிப் பயணம்’ என்ற பெயரில் அக்​.2-ம் தேதி முதல் செயல்​படுத்​தப்​படும் என்று கடந்த ஆக.24-ம் தேதி சட்​டப்​பேர​வை​யில் விதி எண் 110-ன் கீழ் முதல்​வர் விஜய் அறி​வித்​தார்.

இந்​நிலை​யில், வெற்​றிப் பயணம் திட்​டத்​தின் தொடக்க விழா சென்னை கோயம்​பேடு பேருந்து முனை​யத்​தில் நேற்று நடை​பெற்​றது. திட்​டத்தை தொடங்கி வைத்த முதல்​வர் விஜய், சென்​னையி​லிருந்து காஞ்​சிபுரம் செல்​லும் விழுப்​புரம் கோட்​டத்​தின் புறநகர் சாதா​ரணப் பேருந்​தில் இருந்த பெண் பயணி​களுக்கு டிக்​கெட்​டு​களை வழங்​கி​னார். ஒவ்​வொரு பயணி​யிட​மும் எங்கே செல்ல வேண்​டும் எனக் கேட்டு டிக்​கெட்​டு​களை வழங்​கி​னார். மேலும் 2 பேருந்​துகளி​ல் ஏறிய முதல்​வர் பயணி​களுக்கு வணக்​கம் தெரி​வித்​தார்.

இந்த திட்​டத்​தில் தமிழகத்​தி​லுள்ள 7 போக்​கு​வரத்​துக் கழகங்​களின் மாநகர், நகர்ப்​புற சாதா​ரணப் பேருந்​துகள் மற்​றும் மலைப்பகு​தி​களில் 40 கி.மீ. வரை மட்​டுமே மகளிர் கட்​ட​ணமின்​றிப் பயணம் செய்​து ​வந்த நிலை​யில், இத்​திட்​டத்தை விரி​வாக்​கம் செய்து மாநகர, நகரப் பகு​திகளில் இயங்​கும் விரைவு, எல்​எஸ்​எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்​துகள், புறநகர் சாதா​ரணப்பேருந்​துகள் (மொபசல்), 40 கிமீ-க்கு மேற்​பட்ட மலைப்​பகுதி சாதாரணப் பேருந்​துகள் ஆகிய​வற்​றிற்கும் விரிவு படுத்​தப்​பட்​டு, மொத்​த​மாக 12,695 பேருந்​துகளில் மகளிர் கட்​ட​ணமில்​லாமல் பயணம் மேற்​கொள்ள வழி​வகை செய்​யப்​பட்​டுள்​ளது.

இத்​திட்​டத்​தால், மாணவி​கள் தொலை​தூரத்​தில் உள்ள கல்​லூரி​களுக்​குச் செல்​ல​வும், மகளிர் மற்​றும் திருநர் தங்​கள் பணி​யிடங்​களுக்​குச் செல்​ல​வும், மருத்​து​வம் மற்​றும் அத்​தி​யா​வசி​யத் தேவை​களுக்​கும் கட்​ட​ணமின்​றிப் பேருந்​துகளில் பயணிக்க இயலும். வெற்றி பயணத் திட்​டத்தை செயல்​படுத்​து​வது மூலம் போக்​கு​வரத்து கழகங்​களுக்கு ஏற்​படும் நிதி இழப்பை அரசு ஈடு செய்​யும் என அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும் பேருந்​துகளை பெண்​கள் எளிதில் அடை​யாளம் காண டிஜிட்​டல் பலகை​களில் வெற்றி பயணம் என குறிப்​படிப்​பட்​டிருக்​கும் என அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

இந்​நிகழ்​வில், போக்​கு​வரத்​துத் துறை அமைச்​சர் ஆ.விஜய் தமிழன் பார்த்​திபன், அரசு தலை​மைக் கொறடா ரா.சபரி​நாதன், தலை​மைச் செயலர் மு.​சாய்​கு​மார், போக்​கு​வரத்​துத் துறை செயலர் இல.நிர்​மல்​ராஜ், சென்னை மாநகர் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் வீ.ப.ஜெயசீலன் மற்​றும் அரசு உயர் அலு​வலர்​கள் கலந்து கொண்​டனர்.

சாக்​லெட் கொடுத்த பெண்: பேருந்​தில் முதல்​வர் விஜய் டிக்​கெட் கொடுத்​தபோது, பெண்​கள் அவருக்கு கை கொடுத்​து வாழ்த்தினர். டிக்​கெட் பெற்றபின் பெண் ஒரு​வர் முதல்​வருக்கு சாக்லெட் கொடுத்​தார். மேலும் வெற்​றிப் பயண திட்​டத்தை தொடங்கி வைத்​ததற்கு நன்​றியை தெரி​வித்​தனர்.

காந்தி ஜெயந்​தியை முன்​னிட்டு தமிழக மக்​கள் கதர் ஆடைகளை அணிய வேண்​டும் என முதல்​வர் வேண்​டு​கோள் விடுத்​திருந்​தார். இதன்​படி இந்த நிகழ்ச்​சிக்கு முதல்​வர் கதர் வேட்​டி- சட்டை அணிந்து வந்​திருந்​தார். அங்கு அலங்​கரித்து வைக்​கப்​பட்​டிருந்த காந்தி படத்​துக்கு மலர் தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

செங்​கை, திருப்​பூர் மாவட்​டங்​களில் தேர்​தலால் தள்​ளிப்​போன திட்​டம்: மது​ராந்​தகம், தாராபுரம் தொகு​தி​களில் இடைத்​தேர்​தல் நடை​பெறு​வ​தால் தேர்​தல் நடத்தை விதி​கள் காரண​மாக செங்​கல்​பட்டு மற்​றும் திருப்​பூர் மாவட்​டங்​களில் இத்​திட்​டம் நடை​முறைப்​படுத்​தப்​ப​டாது. தேர்​தல் நடை​முறை முடிவுக்கு வந்​த​ பிறகே இங்கு அமலாகும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதனிடையே செங்​கல்​பட்டு மாவட்​டத்​துக்குட்பட்ட பகு​தி​களில் மாநகர் போக்​கு​வரத்து கழகப் பேருந்​து களில் பெண்​கள் டிக்​கெட் எடுக்க மறுத்​துள்​ளனர். நடத்​துநர்​கள் அவர்​களிடம்​ தேர்​தல் நடை​முறை​கள்​ குறித்​து எடுத்​துக் கூறி விளக்​கமளித்​தனர்​.

<div class="paragraphs"><p>கோயம்பேடு பேருந்து முனையத்தில் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, மகளிருக்கு பயணச்சீட்டு  வழங்கினார்.&nbsp;இதில் அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன், துறை செயலர் இல.நிர்மல்ராஜ் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.</p></div>
மதுராந்தகம் தொகுதியில் வாக்கு கேட்டு முதல்வர் விஜய் சாலை வலம் - மக்கள் உற்சாக வரவேற்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in