உளுந்தூர்பேட்டை அருகே புதிய அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் அஜித்குமார் ரசிகர்கள்

உளுந்தூர்பேட்டை அருகே புதிய அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் அஜித்குமார் ரசிகர்கள்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: உளுந்​தூர்​பேட்டை அருகே எலவ​னாசூர்​கோட்​டை​யில் நடிகர் அஜித்​கு​மார் ரசிகர்​கள் தமிழக மக்​கள் கழகம் என்ற புதிய அரசி​யல் கட்​சியை நேற்று தொடங்​கி​யுள்​ளனர்.

மஞ்​சள், வெள்​ளை, பிங்க் ஆகிய மூவண்​ணங்​கள் கொண்ட கட்​சி​யின் கொடியை​யும் அறி​முகம் செய்​தனர். கொடி​யின் நடுவே இரண்டு சிறுத்​தைகள் இடம்​பெற்​றுள்​ளன. இதைத் ​தொடர்ந்து புதிய நிர்​வாகி​கள் நியமனம் மற்​றும் ஆலோ​சனைக் கூட்​டம் நடை​பெற்​றது.

இக்​கூட்​டத்​தில் கட்​சி​யின் நிறு​வனர் மற்​றும் மாநில தலை​வ​ராக கள்​ளக்​குறிச்​சி​யைச் சேர்ந்த ஜெ.ஆபித், மாநில செய​லா​ள​ராக திண்​டுக்​கல்​லைச் சேர்ந்த ராம்​கு​மார், மாநில பொருளாள​ராக முகமது ஷாஉள்​ளிட்ட நிர்​வாகி​கள் நியமனம் செய்​யப்​பட்​டனர்.

கட்​சி​யின் கொள்​கைகள் குறித்து ஜெ.ஆபித் கூறுகை​யில், “மனித நேயத்​துடன் கூடிய மதசார்​பற்ற மக்​கள் பணி, சாதி சமயமற்ற சமூக நீதி, இயற்கை வள பாது​காப்​பு, பெண்​ணுரிமை மற்​றும் சம வாய்ப்​பு, தமிழர் நலம் மற்​றும் தமிழ் மொழி வளர்ச்சி ஆகிய​வற்றை முக்​கிய கொள்​கைகளாக கொண்டு கட்சி தொடங்​கப்​பட்​டுள்​ளது” என்​றார்.

மேலும், நடிகர் அஜித்​கு​மார் இந்தக் கட்​சி​யில் பொதுச்செய​லா​ளர் பதவியை ஏற்று வழிநடத்த வேண்​டும் என அழைப்பு விடுப்​ப​தாக​வும் தெரி​வித்​தார்​.

உளுந்தூர்பேட்டை அருகே புதிய அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் அஜித்குமார் ரசிகர்கள்
‘மலிவான அரசியல்’ - காங். மேடையில் பிரதமர் மோடி குறித்த கிண்டலுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in