ஆட்சி அமைக்க தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ்.மணியன் தகவல்

முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்க தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக உருவாகி உள்ளது. எனினும், ஆட்சி அமைக்​கத் தேவை​யான பெரும்​பான்மை பலத்தை பெறவில்லை. இந்த தேர்தலில் திமுக - 59, அதிமுக - 47, காங்கிரஸ் - 5, பாமக - 4, ஐயூஎம்எல் - 2, இந்திய கம்யூனிஸ்ட் - 2, விசிக - 2, மார்க்சிஸ்ட் - 2, பாஜக - 1, தேமுதிக - 1, அமமுக - 1 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், தவெக ஆட்சி அமைக்க எந்தெந்த கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் வேதாரண்யம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெட்ரா ஓ.எஸ்.மணியன், சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். இதன் பின்னர் செய்தி நிறுவனம் முன்வைத்த கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

“இது சந்திப்பு அல்ல. எங்கள் கட்சியின் பொதுச் செயலாளருக்கு நன்றி தெரிவித்து விட்டு வந்துள்ளேன். தமிழகத்தில் அதிமுகதான் பெரிய கட்சி” என ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

‘ஆட்சி அமைக்க தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்குமா?’ என செய்தியாளர் முன்வைத்த கேள்விக்கு ‘நோ’ என்று அவர் சொன்னார். அதே நேரத்தில் லால்குடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள லீமா ரோஸ் மார்ட்டின், ‘அதிமுகவுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது’ என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தவெகவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

<div class="paragraphs"><p>முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன்</p></div>
“மாற்றத்துக்கான அரசியல் வெற்றி...” - வாக்களித்த மக்களுக்கு தவெக தலைவர் விஜய் நன்றி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in