செங்கல்பட்டு தொகுதி வாக்குச்சாவடி பணிகளுக்கு உள்ளூர் தன்னார்வலர்களை பயன்படுத்தக் கூடாது: தேர்தல் அலுவலரிடம் அதிமுக மனு

செங்கல்பட்டு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்த அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்.

செங்கல்பட்டு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்த அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்.

Updated on
1 min read

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தொகு​தி​யில் 496 வாக்​குச்​சாவடி மையங்​கள் உள்​ளன. 2 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட வாக்​காளர்​கள் உள்​ளனர்.

இத்​தொகு​தி​யில் செங்​கல்​பட்​டு, மறைமலைநகர், நந்​திவரம் - கூடு​வாஞ்​சேரி ஆகிய 3 நகராட்​சிகள் மற்​றும் காட்​டாங்​கொளத்​தூர் ஒன்​றி​யம் ஆகியவை உள்​ளன.

இத்தொகுதியில், அதி​முக சார்​பில் போட்டியிடும் கஜேந்​திரன், செங்​கல்​பட்டு தொகுதி தேர்​தல் நடத்​தும் அலு​வலர் ரம்​யா​விடம் புகார் மனு அளித்​தார்.

அதில், “தொகு​தி​யில் மண்டல அலு​வலர்​கள், மேற்​பார்​வை​யாளர்​கள், தன்​னார்​வலர்​களைச் சொந்த ஊர்​களில் தேர்​தல் பணி​யாற்ற அனு​ம​திக்​கக் கூடாது.

அவ்​வாறு அவர்​கள் பணி​யாற்​றும் பட்​சத்​தில் ஒரு கட்சி சார்ந்து செயல்​படக்​கூடும் என்​ப​தால் அவர்​களை உடனடி​யாக பணி​யிட மாற்​றம் செய்ய வேண்​டும்.

மேலும், பணித்தள பொறுப்​பாளர்​களாகப் பணி​யாற்​று​பவர்​கள் பெரும்​பாலானோர் திமுகவைச் சார்ந்​தவர்​களாக இருப்​ப​தால் அவர்​களை முழு​மை​யாக தேர்​தல் பணி​யில் இருந்து விடுவிக்க வேண்​டும்” என்று தெரிவித்துள்​ளார்​.

<div class="paragraphs"><p>செங்கல்பட்டு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்த அதிமுக வேட்பாளர் கஜேந்திரன்.</p></div>
தி.நகரில் நவீன வாகன காப்பகங்கள் அமைக்கப்படும்: திமுக வேட்பாளர் ராஜா அன்பழகன் வாக்குறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in