6 எம்எல்ஏக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக மீண்டும் கோரிக்கை

6 எம்எல்ஏக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக மீண்டும் கோரிக்கை
Updated on
1 min read

சென்னை: ப​தவி வில​கிய 6 எம்எல்ஏக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று சட்​டப்​பேர​வைத் தலை​வரிடம் அதி​முக சார்பில் வலி​யுறுத்​தப்பட்து.

சென்னை தலை​மைச் செயல​கத்​தில் சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகரை அதி​முக கொறடா அக்ரி கிருஷ்ண​மூர்த்தி நேற்று சந்​தித்​தார்.

பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அதி​முக​வில் இருந்து வெற்றி பெற்று குதிரை பேரத்​தில் பதவி வில​கி, ஆளும்​கட்​சி​யில் சேர்ந்த 6 எம்​எல்​ஏக்​கள் மீது கட்​சித் தாவல் தடைச் சட்​டத்​தின்​கீழ் நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று சட்​டப்​பேர​வைத் தலை​வரிடம் தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறோம்.

இது தொடர்​பாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி சார்​பில் இது​வரை 3 புகார் மனுக்​கள் கொடுத்​தும், நடவடிக்கை எடுக்​கப்​பட​வில்​லை. அதனால், மீண்​டும் பேர​வைத் தலை​வரை சந்​தித்​து, இந்த விவ​காரத்​தில் உரிய நடவடிக்கை எடுக்க வலி​யுறுத்​தினோம்.

மேலும், ஏற்​கெனவே கொடுத்த கடிதங்​களின் அடிப்​படை​யில் நாங்​கள் கேட்​டிருந்த சில விளக்​கங்​களை பேர​வைத் தலை​வர் வழங்​க​வில்​லை. இதையடுத்​து, பதவி வில​கிய எம்​எல்​ஏக்​கள் அளித்த விளக்க கடிதங்​களின் நகல்​களைக் கேட்​டுள்​ளோம்.

தரு​வ​தாக கூறி​யுள்​ளார். பதவி வில​கிய​வர்​கள் என்ன விளக்​கம் அளித்​துள்​ளனர் என்று தெரிந்தால்​தான், அதற் ​குரிய பதிலை பேர​வைத் தலை​வரிடம் நாங்​கள் தெரிவிக்க முடி​யும். ஜூலை 30-ம் தேதி விசா​ரணைக்கு ஆஜராவது குறித்து பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி முடிவு எடுப்​பார்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

6 எம்எல்ஏக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக மீண்டும் கோரிக்கை
காணொலிக் காட்சி வாயிலாக உதயநிதி தலைமையில் இன்று திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in