சி.வி.சண்முகம் தரப்புக்கு 50-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு? - இபிஎஸ் தரப்பில் இன்று அவசர கூட்டம்

அதிமுகவில் அடுத்தடுத்து பரபரப்பு
சி.வி.சண்முகம் தரப்புக்கு 50-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு? - இபிஎஸ் தரப்பில் இன்று அவசர கூட்டம்
Updated on
1 min read

சென்னை: அதிமுகவில் சி.வி சண்முகம் தரப்புக்கு 50-க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ள சூழலில், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை பழனிசாமி இன்று கூட்டுகிறார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டு சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் ஒரு அணி உருவாகி தனியாகச் செயல்பட்டு வருகின்றனர்.

பதவிகள் பறிப்பு

தவெகவுக்கு 108 இடங்கள் கிடைத்த நிலையில், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வரானார். அதைத்தொடர்ந்து நம்பிக்கை தீ்ரமானத்தில் சி.வி.சண்முகம் தரப்பில் 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் சண்முகம் தரப்புக்கு ஆதரவு கொடுப்போரின் கட்சி பதவிகளை பழனிசாமி பறித்தார். அதைத் தொடர்ந்து, பழனிசாமியை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அகற்ற சி.வி.சண்முகம் தரப்பினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி பொதுக்குழுவை கூட்டி பழனிசாமிக்கு செக் வைக்க திட்டமிட்டனர். இதற்காக 50-க் கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர் களிடம் அவர்கள் கையெழுத்து பெற்றிருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.

பழனிசாமி இல்லத்தில்...

இத்தகைய சூழலில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை பழனிசாமி இன்று அவசரமாகக் கூட்டுகிறார். ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடத்தினால் சண்முகம் தரப்பினர் பிரச்சினை செய்யவாய்ப்புள்ளது என பழனிசாமி தரப்பு கருதுகிறது.

இதனால் காலை 9 மணிக்கு பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை பழனிசாமி நடத்துகிறார்.

இதில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவு எடுக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே சண்முகம் தரப்பு எம்ஆர்சி நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது.

அப்போது பொதுக்குழுவை கூட்டுவதற்கு ஆதரவு தெரிவித்து, தங்களுடைய ஆதரவாளர்கள் கையெழுத்து போட்ட விவரத்தை இன்று வெளியிடலாம் என முடிவு செய்துள்ளனர் மேலும் பழனிசாமி வீட்டில் மாவட்ட செயலர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கலாம் எனவும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படு கிறது. இதனால் அதிமுகவுக்குள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சி.வி.சண்முகம் தரப்புக்கு 50-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் ஆதரவு? - இபிஎஸ் தரப்பில் இன்று அவசர கூட்டம்
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in