தென்காசியில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மரியாதை

தென்காசியில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மரியாதை
Updated on
1 min read

சென்னை: பூலித்தேவனின் 311-வது பிறந்தநாளை முன்னிட்டு, தென்காசியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று சுதந்திரத்துக்காக முதன்முதலில் முழக்கமிட்ட போராட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவனின் 311-வது பிறந்த நாளான இன்று `தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, நெற்கட்டும்செவல்’ என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவனின் திருஉருவச் சிலைக்கு அதிமுக சார்பில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, செல்லப் பாண்டியன், சண்முகநாதன் மற்றும் ராஜலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தென்காசியில் பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மரியாதை
பழநி ரயில் நிலையத்தில் ‘டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர்’ - பயணிகளுக்கான புதிய வசதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in