“7.5% உள்ஒதுக்கீட்டுக்கு திமுகதான் காரணம் என்பதா?” - முதல்வர் ஸ்டாலின் பொய் பேசுவதாக பழனிசாமி கருத்து

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி

Updated on
1 min read

சென்னை: நான் முதல்​வ​ராக இருந்​த​போது கொண்டு வந்த 7.5 உள்​இட ஒதுக்​கீட்​டுக்கு திமுகதான் காரணம் என்பதுபோல மு.க.ஸ்​டா​லின் பொய் பேசுகிறார் என்று அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் நடை​பெற்ற ஒரு விழாவில் 7.5 சதவீத உள்​இட ஒதுக்​கீட்டை திமுக அழுத்​தத்​தால் கொண்டு வந்​தது போன்ற ஒரு மிகப் பெரிய பொய்யை முதல்​வர் ஸ்​டாலின் கட்​டமைத்​துள்​ளார். அரசுப் பள்​ளி​களில் படிக்​கும் ஏழை, எளிய, நடுத்தர மாணவர்​களின் மருத்​துவ கனவை நிறைவேற்​று​வதற்​காக மாணவர்​களோ, பெற்​றோரோ, எதிர்க்​கட்சியினரோ கோராத போதும், எனது மனதில் உதித்த இந்த திட்​டத்தை நிறைவேற்ற, ஆளுநரின் ஒப்​புதலுக்கு கால​தாமத​மான​தால், அந்த நடப்பு கல்​வி​யாண்​டிலேயே நிறைவேற்ற வேண்​டும் என்​று, அரசி​யலமைப்​புச் சட்ட ஷரத்​தில் உள்ள உரிமையை பயன்​படுத்​தி, இந்​தி​யா​விலேயே முதல் மாநில​மாக 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்டை நிறைவேற்றி அரசாணை வெளி​யிட்​டேன்.

சத்​துணவு திட்​டம் என்​றால் எம்​ஜிஆர், தொட்​டில் குழந்தை திட்​டம் என்​றால் ஜெயலலி​தா, 7.5 சதவீத உள் இடஒதுக்​கீடு என்​றால் எனது தலை​மையி​லான அரசு என்று எங்​களது சாதனை​களை அடுக்​கிக்​கொண்டே போகலாம். ஏற்​கெனவே நான் முதல்​வ​ராக இருந்​த​போது, சென்னை மாநக​ராட்சி பள்​ளி​களுக்கு காலை உணவு வழங்​கும் திட்​டத்தை தனி​யார் பங்​களிப்​புடன் அமல்​படுத்​தினோம். இந்த திட்​டத்​தையே உல்​டா​வாக்கி இந்த முதல்​வர், காலை உணவுத் திட்டத்தை தான்தான் புதி​தாக கொண்டு வந்​தது போல தம்​பட்​டம் அடித்து வரு​கிறார்.

கடந்த 2021-ம் ஆண்டு முதல் நான்​கரை ஆண்டு கால​மாக தூங்​கி​விட்​டு, ரூ.5 லட்​சம் கோடி கடன் வாங்​கி, இந்​தி​யா​விலேயே கடன் வாங்​கு​வ​தில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்​கியதுடன் அரசுக்கான நிதியை பெருக்​கு​வதற்கும் எவ்​வித நடவடிக்கை​யும் எடுக்​க​வில்லை. ஆட்சி முடி​யும் தரு​வா​யில் கடந்த 3 மாதங்​களாக பல திட்​டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்​யாமலேயே அடிக்கல் நாட்​டு​வது, ஒப்​பந்​தம் கோருவது, மக்​களின் வரி பணத்தில் விளம்​பரம் தேடு​வது போன்​றவை​களால், தமிழக மக்​களை ஏமாற்​றலாம் என்று முதல்வர் ஸ்டா​லின் மனப்​பால் குடிக்​கிறார்.

தான் ஒரு முதல்​வர் பதவி வகிக்​கிறோம் என்ற எண்​ணம்​கூட இல்​லாமல், வாயை திறந்​தால் பொய் சொல்​வதையே வாடிக்​கை​யாகக்​கொண்டு செயல்​படும் ஸ்டா​லினின் பேச்சு இனி தமிழக மக்​களிடம் எடு​ப​டாது. பொய்​யாலும், விளம்​பரத்​தா​லும் உயர்ந்​தவர் வாழ்க்கை நிலைக்​காது என்​பதை ஸ்டா​லின் உணரும் காலம் விரை​வில் வர உள்​ளது. இனி​யா​வது இது​போன்ற பொய்யை கட்​டமைப்​பதை உடனடி​யாக அவர் நிறுத்​திக்​கொள்​ள வேண்​டும்​. இவ்​வாறு பழனிசாமி​ தெரி​வித்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p>அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி</p></div>
வானில் ஓர் அதிசயம்: 6 கோள்கள் அணிவகுப்பு பிப்.28-ல் காணலாம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in