

கோப்புப் படம்
சென்னை: வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல திமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் பிரஸ் பாஸ் வழங்கப்பட்டு இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் அதிமுக எம்.பி.ஐ.எஸ்.இன்பதுரை புகார் அளித்துள்ளார்.
தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கான பிரஸ் பாஸ் கோரி, விதிகளை மீறி திமுக ஐடி விங் நிர்வாகிகள் பட்டியல், பல்வேறு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதில் சில மாவட்டங்களில் திமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு வாக்கு எண்ணும் மையங்களுக்குள் நுழைய பிரஸ் பாஸ் வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இவர்கள் உள்ளே நுழைவதால், வாக்கு எண்ணிக்கைக்கு பாதிப்பு ஏற்படும்.
எனவே, வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்கு எண்ணும் மையங்களில் நுழைவோரை தீவிரமாக பரிசீலனைக்கு உட்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். விதிகளை மீறி பெற்ற பிரஸ் பாஸுடன் வருவோரை அனுமதிக்கக்கூடாது.
விதிகளை மீறி பிரஸ் பாஸ் வழங்கிய மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மக்கள் தொடர்பு அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.