“விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது” - ஜான் பாண்டியன் கருத்து

“விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது” - ஜான் பாண்டியன் கருத்து
Updated on
1 min read

“விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. அதிமுக - திமுக இடையேதான் தேர்தலில் போட்டி இருக்கும்” என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்தார்.

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், பாளையங்கோட்டையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜான் பாண்டியன் கூறியதாவது:

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு கூட்டம் 31-ம் தேதி நடைபெற உள்ளது. அதன் பின்னர் யாருடன் கூட்டணி என்பது குறித்து தெரிவிப்போம். எந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் அது நல்ல திட்டம் என்றால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். எதிர்க்கட்சி என்பதால் திமுக அதை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதையாவது சொல்கிறது.

விரைவில் தமிழகம் வரவுள்ள பாஜக தலைவர்கள், “கூட்டணி கட்சியினர் அனைவரையும் ஒரே மேடையில் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்கள். எனக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. அழைப்பு வந்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன். விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. மக்கள் கூட்டத்தை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது. அவர் வரட்டும், தேர்தலை சந்திக்கட்டும். ஆனால், தமிழ்நாட்டில் அதிமுக - திமுக ஆகிய இரு கட்சிகளுக்கு இடையேதான் போட்டி. 3-வது, 4-வது அணிகள் போட்டிக்கு வராது.

பெண்களை பெண்களேதான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். மதுக்கடைகள் நாட்டில் இருக்கத் தான் செய்யும். பெற்றோர்கள் குழந்தைகளை சரியாக வளர்க்கும் பட்சத்தில் அவர்கள் ஏன் மதுவுக்கு அடிமையாகப் போகிறார்கள்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.

“விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது” - ஜான் பாண்டியன் கருத்து
“கூட்டணிக் கட்சிகளுக்கு இப்படித்தான் எழுதிக் கொடுக்கிறாரா ஸ்டாலின்?” - எல்.முருகன் கேள்வி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in