

எம்.கஜா என்கிற கஜேந்திரன்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளராக எம்.கஜா என்கிற கஜேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள அவர், தொகுதிக்கு உட்பட்ட மறைமலைநகர் காட்டாங்கொளத்தூர் கிழக்கு ஒன்றியம், செங்கல்பட்டு நகரம் உள்ளிட்ட பகுதிகளில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினர்.
அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் அதிகரித்துள்ளன.
திமுக ஆட்சியில் தமிழகம் உலக அளவில் தலைகுனிந்து உள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் கே.பழனிச்சாமி என்னும் நான் சத்தம் ஒலித்தால்தான் இதற்கெல்லாம் முடிவு கட்ட முடியும்” என்றார்.
நான் கியாரண்டி..
மேலும், கட்சி நிர்வாகிகளை கவரும் வகையில், திமுக வேட்பாளரைவிட பாகம் அளவில் 100 வாக்குகள் அதிகம் பெறுபவர்களுக்கு கால் பவுன் மோதிரமும், 300 வாக்குகள் அதிகம் பெறுபவர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்புடைய ராயல் என்பீல்ட் பைக்கும் வழங்கப்படும்.
இந்த பரிசுகளை பழனிசாமி கையாலேயே உங்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். அதற்கு நான் கியாரண்டி’ என்றார். இதைக் கேட்டதும் கூட்டத்துக்கு வந்திருந்த நிர்வாகிகள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.