பாஜக, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு: மயிலாப்பூர் மாட வீதிகளில் அமித் ஷா ‘ரோடு ஷோ’

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நினைவுப்பரிசு வழங்கி வரவேற்ற அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார் ரெட்டி, அப்போலோ மருத்துவமனை செயல் துணை தலைவர் ப்ரீதா ரெட்டி ஆகியோர். உடன், மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளார்.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நினைவுப்பரிசு வழங்கி வரவேற்ற அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார் ரெட்டி, அப்போலோ மருத்துவமனை செயல் துணை தலைவர் ப்ரீதா ரெட்டி ஆகியோர். உடன், மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளார்.

Updated on
1 min read

சென்னை: ​பாஜக, அதி​முக வேட்​பாளர்​களுக்கு ஆதர​வாக மயிலாப்பூர் மாட வீதி​களில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா ‘ரோடு ஷோ’ மூலம் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார். அப்​போது, தொண்​டர்​கள் அவர் மீது மலர் தூவி உற்​சாக வரவேற்பு அளித்​தனர்.

தமிழகத்தில் ​சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்​கான பிரச்​சா​ரம் நாளை மாலை​யுடன் முடிவடைகிறது. இதையடுத்​து, அரசி​யல் கட்​சித் தலை​வர்​கள், வேட்​பாளர்​கள் தீவிர வாக்கு சேகரிப்​பில் ஈடு​பட்டு வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், நேற்று மதி​யம் ஈரோட்​டில் பிரச்​சா​ரத்தை முடித்​துக் கொண்​டு, சென்னை வந்த மத்​திய உள்​துறை அமித் ஷா, கிண்டி நட்​சத்​திர ஹோட்​டலில் பாஜக நிர்​வாகி​களு​டன் தேர்​தல் நில​வரம் குறித்து ஆலோ​சனை நடத்​தி​னார்.

பின்​னர், மாலை 6 மணிக்கு மயி​லாப்​பூர் கபாலீஸ்​வரர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்​தார். அவருடன் மத்​திய அமைச்​சர் பியூஸ் கோயல், மயி​லாப்​பூர் தொகுதி பாஜக வேட்​பாளர் தமிழிசை சவுந்​தர​ராஜன், ஆயிரம் விளக்கு தொகுதி அதி​முக வேட்​பாளர் வளர்​ம​தி, வேளச்​சேரி தொகுதி அதி​முக வேட்​பாளர் அசோக் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

சுமார் 20 நிமிட தரிசனத்​துக்கு பிறகு வெளியே வந்த அமித்​ஷா, கிழக்கு மாட வீதி​யில் திறந்த வாக​னத்​தில் ‘ரோடு ஷோ’வை தொடங்​கி​னார். மாட வீதி​களின் இரு​புற​மும் கூடி​யிருந்த பாஜக, அதி​முக மற்​றும் கூட்​டணி கட்​சிகளின் தொண்​டர்​கள், உற்​சாக முழக்​கமிட்டு மலர்​களைத் தூவி அமித் ஷாவை வரவேற்​றனர்.

பொது​மக்​களைப் பார்த்​துக் கையசைத்​த​படி, தாமரை மற்​றும் இரட்டை இலை சின்​னங்​களுக்கு வாக்கு சேகரித்​தார். சித்​திரைக்​குளம், தெற்கு மாட வீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை, வெங்​கடேசா அக்​ரஹாரம் சாலை சந்​த​திப்பு வரை சுமார்​ ஒரு மணி நேரம்​ ரோடு ஷோ நடைபெற்​றது.

<div class="paragraphs"><p>மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நினைவுப்பரிசு வழங்கி வரவேற்ற அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார் ரெட்டி, அப்போலோ மருத்துவமனை செயல் துணை தலைவர் ப்ரீதா ரெட்டி ஆகியோர். உடன், மயிலாப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளார்.</p></div>
குன்றத்தூர் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: வீட்டு உரிமையாளர் போக்சோவில் கைது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in