

சென்னை: தமிழக இளைஞர்களுக்கான வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெருக்குவதற்காக அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்க ளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
தமிழக இளைஞர்களுக்கு சர்வதேச அளவில், அதிகளவிலான வேலைவாய்ப்புகளை பெருக்கவும், வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு தேவையான உயர்தர திறன் மற்றும் மொழி பயிற்சிகளை வழங்கவும் தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இடையே ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
வெளிநாட்டு வேலைநாடு நர்களை பாதுகாப்பான முறையில் பணியமர்த்தி வரும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தற்போது இளைஞர்களின்உலகளாவிய போட்டித்தன் மையை அதிகரிக்கும் நோக்கில் இந்த கூடுதல் முன்னெடுப்பு களை எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக ஆட்டோமொபைல், தளவாடங்கள் மற்றும் சுகாதார நலன் ஆகிய துறைகளுக்கான தமிழ்நாடு உயர்திறன் மேம்பாட்டு மையங்கள், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை மற்றும் ஆர்.எம்.கே குழும கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுடன் தனித்தனியே ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டு முயற்சியின் மூலம், சர்வதேச நிறுவனங்களின் தேவைக்கேற்ப இளைஞர்களுக் குத் திறன் பயிற்சி அளிக்கப்படுவ துடன், வெளிநாட்டு நிறுவனங்களைக் கண்டறிந்து தகுதியான வேலைவாய்ப்புகள் பெற்றுத் தரப்படும்.
குறிப்பாக, வெளிநாடுகளுக்கு உயர் கல்வி பயிலச் செல்லும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலான மத்திய அரசின் சான்றொப்பம் பெறும் பணிகளை, இடைத்தரகர்கள் இன்றி எளிமையாகவும் சிரமமின்றியும் பெற இத்திட்டம் வகை செய்கிறது.
இந்நிகழ்வில் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் எஸ்.எம்.நாசர், சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலர் பிரதீப் யாதவ், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தக்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.