திமுகவில் வயது, பதவிக் காலம் நிர்ணயம்: கடலூர், கள்ளக்குறிச்சியில் அடியோடு மாறும் நிர்வாகிகள்

திமுகவில் வயது, பதவிக் காலம் நிர்ணயம்: கடலூர், கள்ளக்குறிச்சியில் அடியோடு மாறும் நிர்வாகிகள்
Updated on
2 min read

விருத்தாசலம்: சென்னை அண்ணா அறிவா லயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் தலைமை செயற்குழு முடிவின்படி 70 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டும் 3 முறைகளுக்குமிகா மில் மாவட்டச் செயலாளர் பதவி என புதிய விதிகள் நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

45 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு கிளைச் செயலாளர் பதவி, 50 வயதுக்கு உட்பட்ட வர்களுக்கு வட்டச் செயலாளர் பதவி, 60 வயதுக்கு உட்பட்ட வர்களுக்கு நகரச் செயலாளர், பேரூராட்சி செயலாளர், ஒன்றியச் செயலாளர் பதவி எனவும், இப்பதவிகளில் அதிகபட்சம் இருமுறைகளுக்கு மேல் தொடரமுடியாது எனவும் திமுக தலைமை தெளிவுபடுத்தியுள் ளது. இந்த புதிய திருத்தத்தால் 14 மாவட்டச் செயலாளர்களின் பதவிகள் பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.

இதுதவிர கட்சியின் முக்கியப் பதவிகளாக கருதப்படும், ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள் பதவி வகிப்பவர்களில் 80 சதவீதம் பேரின் பதவிகளும் பறிபோகும் அபாயம் உள்ளது. குறிப்பாக, தற்போதைய கடலூர் கிழக்கு மாவட்டத்தில் கடலூர் ஒன்றித்தில் கிழக்கு, மேற்கு ஒன்றியங்களின் நிர்வாகிகள் பதவியிலிருத்து விடுவிக்கப்படுவர்.

இதேபோல் மாநகரச் செயலாளர் பதவி யும் நீக்கப்பட்டுள்ளதால் தற்போதைய மாநகரச் செயலா ளர் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதுதவிர கம்மாபுரம், குறிஞ்சிப்பாடி, பரங்கிப் பேட்டை, காட்டுமன்னார்கோவில் உள் ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள் பதவியிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

கடலூர் மேற்கு மாவட்டத்தை பொறுத்தவரை விருத்தாசலம் நகரம், திட்டக்குடி நகரம், பெண்ணாடம் நகரம், பண்ருட்டி நகரம், விருத்தாசலம் தெற்கு ஒன்றியம், மங்களூர் தெற்கு, வடக்கு, மேற்கு, நல்லூர் ஒன்றியம் என பெரும்பாலான நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் 60 வயதுக்கு மேற்பட்டவராக இருப்பதோடு, ஒவ்வொருவரும் 3 முறைகளாக தொடர்ந்து அதே பதவியில் தொடர்வதாலும் அவர்கள் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படும் நிலை உள்ளது. இதன்மூலம் புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இளைஞரணி நிர் வாகிகளிடையே எழுந்துள்ளது.

மேலும் இரு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்பதால், கடலூர் மற்றும் குறிஞ் சிப்பாடி ஆகிய தொகுதிகள் அடங்கிய கடலூர் கிழக்கு, பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய தொகுதிகள் அடங்கிய கடலூர் மேற்கு, நெய்வேலி மற்றும் புவனகிரி தொகுதிகள் அடங்கிய கடலூர் மத்திய மாவட்டம், சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் அடங்கிய கடலூர் தெற்கு மாவட்டம் என 4 மாவட்டச் செயலாளர்கள் உருவாக்கப்பட்டி ருப்பதாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதில் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் 69 வயது முடிந்து 70-வது வயதை நெருங்குவதாலும், 3 முறைகளுக்கு மேல் மாவட்டச் செயலாளர் பதவி வகித்துவிட்டதால் அவர் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவார் எனவும், அவரது மகனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி எனவும் கூறப்படுகிறது. மேலும் சி.வெ.கணேசன் மேற்கு மாவட்டச் செயலாளர் பதவியில் தொடர் வார் என்றும், சபா.ராஜேந்திரன், துரை.கி.சரவணன், சிவக்குமார் ஆகியோர் மாவட்டச் செயலாளர் பதவிக்கான ரேஸில் உள்ளனர் எனவும் கட்சி மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்டச் செய லாளர்களை பொறுத்தவரை மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்ற போதிலும், கள்ளக்குறிச்சி நகரம், திருக்கோவிலூர் நகரம், ரிஷி வந்தியம், உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரம், கல்வராயன்மலை ஒன்றியச் செய லாளர்களும் விடுவிக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் நியமிக் கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக திமுகவினர் கூறினர்.

குறிப்பாக கிளைச் செய லாளர்களில் பெரும்பாலானோர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களே இருப்பதால் அவர்களில் பெரும் மாற்றம் இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.

திமுகவில் வயது, பதவிக் காலம் நிர்ணயம்: கடலூர், கள்ளக்குறிச்சியில் அடியோடு மாறும் நிர்வாகிகள்
ஏன் இந்த அவசரம்? - பரந்தூர் திட்டம் ரத்து விவகாரத்தில் முதல்வர் விஜய்க்கு பாஜக சரமாரி கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in