“வரைவு பட்டியல் வெளியானதும் வாக்காளர்கள் விவரங்களை சரிபார்க்கலாம்” - அர்ச்சனா பட்நாயக் தகவல்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்

Updated on
1 min read

“டிச.19-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்ட பின், தங்​கள் விவரங்​களை வாக்​காளர்​கள் மாவட்ட தேர்​தல் அதி​காரி​யின் இணை​யதளம் மூலம் அறிந்து கொள்​ளலாம்” என தமிழக தலைமை தேர்​தல் அதி​காரி அர்ச்​சனா பட்​நாயக் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமி​ழ​கம் முழு​வதும் வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி நடை​பெற்று வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக, வரைவு வாக்​காளர் பட்​டியல் வரும் டிச.19-ம் தேதி வெளி​யிடப்பட உள்​ளது. இந்த நடவடிக்​கை​யானது, தகு​தி​யான யாரும் வாக்​காளர் பட்​டியலில் இருந்து விடு​பட்டு விடக்​கூ​டாது என்ற தேர்​தல் ஆணை​யத்​தின் உறு​திப்​பாட்​டைப் பின்​பற்​றும் வகை​யில் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யீட்​டுக்கு முந்​தைய கால​கட்​டத்​தில், வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்​கள் (BLOs) மூன்று அல்​லது அதற்கு மேற்​பட்ட முறை சென்று அணுகிய​போதும் தொடர்பு கொள்ள முடி​யாத வாக்​காளர்​கள் அதாவது இறந்​தவர்​கள், கண்​டறிய இயலாத, முகவரி​யில் இல்​லாத வாக்​காளர்​கள் (Absent), இடம் பெயர்ந்​தவர்​கள் (Shifted), இரட்டை பதிவு செய்த வாக்​காளர்​கள் என குறிக்​கப்​பட்ட வாக்​காளர்​களின் வாக்​குச்​சாவடி வாரி​யான பட்​டியலை (ASD பட்​டியல்​கள்) தயா​ரித்​துள்​ளனர்.

அங்​கீகரிக்​கப்​பட்ட அரசி​யல் கட்​சி​களின் வாக்​குச்​சாவடி நிலை முகவர்​களு​டன் (BLAs) நடத்​தப்​பட்ட கூட்​டங்​களில் அவர்​களுக்கு இப்​பட்​டியல் பகிரப்​பட்​டுள்​ளது. இக்​கூட்​டங்​களின் நடவடிக்கை குறிப்​பு​கள் பிஎல்ஓ செயலி​யில் வாக்​குச்​சாவடி நிலை அலு​வலர்களால் பதிவேற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

ஏஎஸ்டி பட்​டியலில் இடம்​பெற்​றுள்ள ஒவ்​வொரு வாக்​காளரின் உண்​மை​யான நிலையை உறுதி செய்​து​கொள்​வதற்​காக​வும், வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யீட்​டிற்கு முன்பே ஏதே​னும் பிழைகள் இருப்​பின் அவற்றை திருத்​து​வதற்​காக​வும் இந்த நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

வரும் டிச.19-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்ட பின்​னர், இறந்​தவர்​கள், கண்​டறிய இயலாத, முகவரி​யில் இல்​லாத வாக்​காளர்​கள், இடம் பெயர்ந்​தவர்​கள், இரட்டை பதிவு செய்த வாக்​காளர்​கள் பட்​டியலில் (ASD பட்​டியல்​கள்) இடம்​பெற்​றுள்ள வாக்​காளர்​களின் விவரங்​களை அணுகு​வதற்​கான வசதி, அந்​தந்த மாவட்ட தேர்​தல் அதி​காரி​களின் (DEO) இணை​யதளங்​களில் வழங்​கப்​படும். பொது​மக்​கள் தங்​களது விவரங்​களை தேவைப்​படின் இப்​பட்​டியலில் சரி​பார்​த்​துக் கொள்​ளலாம். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் </p></div>
விஜய் கூட்டத்துக்கு அனைவருக்கும் அனுமதி: செங்கோட்டையன் தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in