

செம்மலையை துண்டு அணிவித்து வரவேற்ற விஜய்.
தாராபுரம்: தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தவெகவில் இணைந்தார். அவருக்கு முதல்வர் விஜய் துண்டுஅணிவித்து வரவேற்றார்.
அதிமுகவின் மூத்த தலைவர் செம்மலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் கடந்த 2001 முதல் 2004 வரை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
கட்சியில் நடைபெற்று வரும் சம்பவங்கள் தனக்கு மனவேதனையை ஏற்படுத்தியதாக தெரிவித்திருந்த நிலையில், கடந்த மே மாதத்தில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக செம்மலை அறிவித்திருந்தார். இந்நிலையில், தாராபுரம் இடைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த முதல்வர் முன்னிலையில் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்டார்.