செப்.6-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுவது குறித்து ஆலோசனை

செப்.6-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுவது குறித்து ஆலோசனை
Updated on
1 min read

சென்னை: அ​தி​முக மாவட்ட செய​லா​ளர்​கள் ஆலோ​சனை கூட்​டம் செப்​.6-ம் தேதி சென்​னை​யில் உள்ள கட்சி தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெற உள்​ளது. இதில் கட்​சி​யின் செயற்​குழு மற்​றும் பொதுக்​குழுவை நடத்​து​வது தொடர்​பாக ஆலோ​சிக்க இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

சட்​டப்​பேர​வைத் தேர்​தலுக்கு பிறகு, அதி​முக​வில் பல்​வேறு பிரச்​சினை​கள் ஏற்​பட்டு வரு​கின்​றன. ஏற்​கெனவே 6 எம்​எல்​ஏக்​கள் தங்​கள் பதவியை ராஜி​னாமா செய்​து​விட்​டு, தவெக​வில் இணைந்​து​விட்​டனர். சி.​வி.சண்​முகம் தலை​மை​யில் நத்​தம் விஸ்​வ​நாதன், எஸ்​.பி.வேலுமணி, கே.பி.அன்​பழகன் உள்​ளிட்​டோர் தனி அணி​யாக செயல்​பட்டு வரு​கின்​றனர்.

முன்​னாள் அமைச்​சர் வைகைச்​செல்​வன் உள்​ளிட்ட பல முக்​கிய நிர்​வாகி​களும் அதி​முக​வில் இருந்து விலகி தவெக​வில் இணைந்து வரு​கின்​றனர். கட்​சி​யின் பொதுக்​குழுவை கூட்ட வேண்​டும் என்​றும் நிர்​வாகி​கள் சிலர் வலி​யுறுத்தி வரு​கின்​றனர்.

இந்​நிலை​யில், செப்​.6-ம் தேதி 10 மணிக்​கு, பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தலை​மை​யில் மாவட்​டச் செய​லா​ளர்​கள் ஆலோ​சனை கூட்​டம் நடை​பெற உள்​ள​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. சென்னை​யில் உள்ள தலைமை அலு​வல​கத்​தில் நடை​பெறும் இந்த கூட்​டத்​தில், அதிருப்​தி​யாளர்​களை சமா​தானப்​படுத்​து​வது, சட்​டப்​பேரவை கூட்​டத்​தொடர் முடிந்​ததும் கட்சி செயற்​குழுவை கூட்​டு​வது, பின்​னர் பொதுக்​குழு கூட்​டத்தை கூட்​டு​வது குறித்து ஆலோ​சிக்க இருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

செப்.6-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுவது குறித்து ஆலோசனை
விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என்றால் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும்: மேலிட பார்வையாளர் எச்சரிக்கை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in