விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என்றால் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும்: மேலிட பார்வையாளர் எச்சரிக்கை

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

Updated on
1 min read

ஊட்டி: ​விஜய்​தான் பிரதமர் வேட்​பாளர் என்​றால் தவெக கூட்​ட​ணி​யில் இருந்து காங்​கிரஸ் வெளி​யேறும் என மேலிட பார்​வை​யாளர் அசோகன் சாலமன் ஊட்​டி​யில் தெரி​வித்​தார்.

காங்​கிரஸ் கட்​சி​யில் மறு சீரமைப்பு நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. அதன்​படி, தமிழகத்​தில் 77 மாவட்ட காங்​கிரஸ் தலை​வர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இதன் ஒரு பகு​தி​யாக நீல​கிரி மாவட்​டத்​தில் ஊட்​டி, குந்​தா, குன்​னூர், கோத்​தகிரி, கூடலூர், பந்​தலூர் ஒன்​றிய தலை​வர்​கள், நகராட்​சி, பேரூ​ராட்சி காங்​கிரஸ் கமிட்டி தலை​வர்​கள், 10 வாக்​குச்​சாவடிகள் அடங்​கிய மண்டல கமிட்டி தலை​வர்​களு​டன் ஆலோ​சனை கூட்​டம் ஊட்​டி​யில் மாவட்ட தலை​வர் டி.​நாக​ராஜ் தலை​மை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில், கட்​சி​யின் மேலிட பார்​வை​யாளர் அசோகன் சாலமன் கலந்​து​கொண்டு இயக்க மறுசீரமைப்பு திட்​டம் குறித்து விளக்​கி, நிர்​வாகி​கள் தேர்​வுக்​கான விருப்ப மனுக்​களை வழங்​கி​னார். கூட்​டம் முடிந்த பிறகு அவரிடம், விஜய்​தான் அடுத்த பிரதமர் வேட்​பாளர் என தவெக​வினர் தெரி​வித்து வரு​வது குறித்து செய்​தி​யாளர்​கள் கேட்​டபோது, “ராகுல் காந்​தி​தான் பிரதமர் வேட்​பாளர் என்​பது அனைத்து காங்​கிரஸ் தொண்​டர்​களின் கருத்​து.

ஒரு கட்​சி​யில் இருப்​பவர்​கள் தொண்​டர்​களை உற்​சாகப்​படுத்த சில கருத்​துகளை கூறு​வார்​கள். அது அமைச்​சர்​களாக கூட இருக்​கலாம், அதை அவர்​கள் தவிர்த்​திருக்​கலாம். இந்த கருத்து தவெக​வின் நிலைப்​பா​டாக தெரிய​வில்​லை. அப்​படி இருந்தால் தவெக கூட்​ட​ணியி​லிருந்து காங்​கிரஸ் கட்சி வில​கும்” என்​றார்.

<div class="paragraphs"><p>முதல்வர் விஜய்</p></div>
ஆவின் வேலை மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மனு தள்ளுபடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in