

சென்னை: அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடன் வரும் 9-ம் தேதி, சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறுகிறது.
இதன்படி விருப்ப மனு அளித்துள்ளவர்களுடன் வரும் 9-ம் தேதி, சென்னையில் கட்சியின் தலைமை அலுவலத்தில் நேர்காணல் நடைபெறவுள்ளது. காலை 9.30 மணி சேலம் மாநகர், 10.15 மணி சேலம் புறநகர், 11 மணி ஈரோடு மாநகர் மற்றும் ஈரோடு புறநகர் கிழக்கு, 11.45 மணி ஈரோடு புறநகர் மேற்கு மற்றும் கரூர், 12.30 மணி திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, 4 மணி நாமக்கல், 4.45 மணி திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் கிழக்கு மற்றும் திருப்பூர் புறநகர் மேற்கு, 5.30 மணி கோவை மாநகர் மற்றும் கோவை புறநகர் வடக்கு, 6.15 மணி கோவை புறநகர் தெற்கு, நீலகிரி மாவட்டத்துக்கு நேர்காணல் நடைபெறும்.
இந்த நேர்காணலுக்கு கட்சி அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களுக்கு உட்பட்ட தொகுதி களுக்கு விருப்ப மனு அளித்தவர்கள், விருப்ப மனு பெற்றதற்கான அசல் ரசீதுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.