அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்: நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் சென்ற நிர்வாகிகள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகத்தை அதிமுக நேற்று தொடங்கியது. இதையடுத்து விருப்பமனுவை வாங்குவதற்காக கட்சியின் தலைமை அலுவலகத்தில் குவிந்த நிர்வாகிகள். படம்: எல்.சீனிவாசன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகத்தை அதிமுக நேற்று தொடங்கியது. இதையடுத்து விருப்பமனுவை வாங்குவதற்காக கட்சியின் தலைமை அலுவலகத்தில் குவிந்த நிர்வாகிகள். படம்: எல்.சீனிவாசன்

Updated on
1 min read

சென்னை: அ​திமுக சார்​பில் 2026 தேர்​தலில் போட்​டி​யிட விருப்ப மனு விநி​யோகம் சென்​னை​யில் நேற்று தொடங்​கியது. ஆயிரக்​கணக்​கான நிர்​வாகி​கள் நீண்ட வரிசை​யில் நின்று மனுக்​களை வாங்கிச் சென்​றனர்.

தமிழகம், புதுச்​சேரி, கேரளா ஆகிய சட்​டப்​பேரவைகளுக்கு பொதுத்​தேர்​தல் நெருங்கி வருகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டன. இதன்படி அதி​முக சார்​பில் போட்​டி​யிட விரும்​பும் நபர்​கள், விருப்பமனு வழங்க ஏது​வாக விருப்பமனு விநி​யோகம் தொடக்க நிகழ்ச்​சி, சென்னையில் கட்​சித் தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இந்த நிகழ்ச்​சி​யில் கட்​சி​யின் துணைப் பொதுச்​செய​லா​ளர்​கள் கே.பி.​முனு​சாமி, நத்​தம் விஸ்​வ​நாதன், பொருளாளர் திண்​டுக்​கல் சி.சீனி​வாசன், முன்​னாள் அமைச்​சர்​கள் டி.ஜெயக்​கு​மார், பா.வளர்​ம​தி, எஸ்​.கோகுல இந்திரா ஆகியோர் இந்த விருப்பமனு விநி​யோகத்​தை தொடங்​கிவைத்தனர்.

பின்​னர் தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த நிர்​வாகி​கள் மற்​றும் தொண்​டர்​கள் ஏராள​மானோர் அதி​முக தலைமை அலு​வல​கத்​தில் திரண்டு நேற்று மனுக்​களை பெற்​றனர். தமிழகத்​தில் பொது மற்​றும் தனி தொகு​தி​கள் அனைத்​துக்​கும் ரூ.15 ஆயிரம் செலுத்தி மனுக்​களை பெற்​றனர். புதுச்​சேரி​யில் போட்​டி​யிடு​வதற்கான விருப்ப மனுக்​களை ரூ.5 ஆயிரம் செலுத்தி பெற்​றனர்.

ஒவ்​வொரு நாளும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விருப்பமனுக்​கள் விநி​யோகம் நடை​பெறும். பூர்த்தி செய்த விண்​ணப்​பங்​களை​யும் மேற்​கூறிய நேரத்​தில் தரலாம். விருப்பமனு விநி​யோகம் டிச.23-ம் தேதி வரை நடை​பெறும்.

பெரும்​பாலான அதி​முக நிர்​வாகி​கள் தங்​களுக்​காக​வும், தங்​கள் தொகு​தி​யில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி போட்​டி​யிட​வும் விருப்ப மனுக்​களை பெற்​றுச்சென்​றனர். இந்த விருப்ப மனு​வில் அதி​முக​வில் எந்த ஆண்​டிலிருந்து உறுப்​பின​ராக உள்​ளீர்​கள், கட்​சி​யில் தற்​போது வகிக்​கும் பதவி, சார்ந்த சமூகம், தமிழ் தவிர சரள​மாக பேசத்​தெரிந்த பிற மொழிகள், வெற்றி வாய்ப்பு விவரம், கட்சி வளர்ச்​சிக்காக ஆற்​றிய பணி​கள், கட்சி போராட்​டங்​களில் சிறை சென்ற விவரம், நீதி​மன்ற வழக்​கு​கள் இருந்தால் அதன் விவரம் என்பன உள்​ளிட்ட 25 கேள்வி​கள் இந்த மனுவில் இடம்​பெற்​றுள்​ளன.

இதனிடையே, நேற்று ஒரே நாளில் 1,237 விருப்ப மனுக்​கள் பெறப்​பட்​டன. இதில் 349 பேர், தங்​கள் தொகு​தி​யில் பழனி​சாமி போட்​டி​யிட வேண்​டும் என்​றும், தங்​களுக்கு போட்​டி​யிட வாய்ப்பு வேண்டி 888 பேரும் விருப்ப மனு அளித்​துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு விநியோகத்தை அதிமுக நேற்று தொடங்கியது. இதையடுத்து விருப்பமனுவை வாங்குவதற்காக கட்சியின் தலைமை அலுவலகத்தில் குவிந்த நிர்வாகிகள். படம்: எல்.சீனிவாசன்</p></div>
தங்கம் விலை ரூ.1 லட்சம் தாண்டியது: வரலாறு காணாத புதிய உச்சம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in