நடிகர் விக்ரம் சர்ச்சை: லார் கிப்பான் குரங்கு உரிமையாளர் மீது வழக்கு

நடிகர் விக்ரம் சர்ச்சை: லார் கிப்பான் குரங்கு உரிமையாளர் மீது வழக்கு
Updated on
1 min read

ஈரோடு: நடிகர் விக்ரம் சமீபத்தில் லார் கிப்பான் என்ற குரங்குடன் விளையாடுவது போன்ற வீடியோ சமூக வலை தளங்களில் பரவி சர்ச்சையை கிளப்பியது.

இது தொடர்பாக வனத்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த குரங்கு, ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த கேசவநாதன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவர் மீது இரு பிரிவுகளின் கீழ் வனத்துறையினர் வழக்கு பதிந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி மணிப்பூரில் இருந்த லார்கிப்பான் இனத்தை சேர்ந்த 3 குரங்குகளை, கேசவநாதன் விலைக்கு வாங்கியுள்ளார்.

இவ்வகை குரங்குகளை வாங்கிய ஒரு மாதத்துக்குள் தமிழகத்தில் பயன்படுத்த வனத்துறையினரின் உரிய அனுமதியை பெற வேண்டும். அவர் ஆகஸ்ட் 9-ம் தேதியன்றுதான் ஆன்லைனில் அனுமதி பெற்றுள்ளார். எனவே, தாமதமாக பதிவு செய்ததற்காக ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.

அதேபோல, இவர் வாங்கிய 3 குரங்குகளில் ஒரு குரங்கு இறந்துள்ளது. இதையும் வனத்துறையினரிடம் அவர் தெரிவிக்கவில்லை. இதற்காகவும் ஒரு வழக்கு பதியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பிய நிலையில், இன்று கேசவநாதனிடம் விசாரணை மேற்கொண்டோம். அவருக்கு வனச்சட்டப்படி அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வன உயர் அதிகாரிகள் முடிவெடுப்பார்கள்” என்றனர்.

நடிகர் விக்ரம் சர்ச்சை: லார் கிப்பான் குரங்கு உரிமையாளர் மீது வழக்கு
“ராகுல் காந்தி செயல்படும் விதத்தை இளைஞர்கள் ஏற்க மாட்டார்கள்” - நிதின் நபின்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in