சசிகலாவுக்கு நடிகர் கார்த்திக் ஆதரவு

சசிகலாவுக்கு நடிகர் கார்த்திக் ஆதரவு
Updated on
1 min read

புதிய கட்சி தொடங்கியிருக்கும் சசிகலாவை சந்தித்த நடிகர் கார்த்திக், சட்டப்பேரவைத் தேர்தலில் தனது ஆதரவை தெரிவித்தார்.

பாமக நிறுவனர் ராமதாஸ், 'அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியிருக்கும் சசிகலா ஆகியோர் கூட்டணி அமைத்து சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் சசிகலாவை நடிகர் கார்த்திக் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார்.

அனைத்திந்திய ஃபார்வார்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவராக இருந்த கார்த்திக், தற்போது மனித உரிமை காக்கும் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில் சசிகலாவுடனான சந்திப்பின்போது, சட்டப்பேரவை தேர்தலில் சசிகலா - ராமதாஸ் கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சசிகலாவுக்கு நடிகர் கார்த்திக் ஆதரவு
சட்டவிரோத மது விற்பனை: சென்னையில் தாய், மகள் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in