சட்டவிரோத மது விற்பனை: சென்னையில் தாய், மகள் கைது

சட்டவிரோத மது விற்பனை: சென்னையில் தாய், மகள் கைது
Updated on
1 min read

சென்னை டி.பி.சத்திரம் பகுதியில் கடந்த ஜன.2ம் தேதி கே.வி.என்.புரம் முதல் தெரு வில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேர் கொண்ட கும்பலை கண்டுபிடித்தனர்.

போலீஸாரைக் கண்டதும் அவர்களில் இரு பெண்கள் தப்பியோடினர். எனினும், செனாய் நகரைச் சேர்ந்த மணிமாறன் (35) என்பவரை மடக்கிப் பிடித்த போலீஸார், அவரிடமிருந்து 100 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய் தனர். கைது செய்யப்பட்ட மணிமாறனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தப்பியோடியவர்கள் அவரது தாய் சாந்தி (64) மற்றும் சகோதரி ராதிகா (37) என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் குடும்பமாகச் சேர்ந்து இந்த சட்டவிரோத தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இதையடுத்து, தப்பியோடி தலைமறைவாக இருந்த தாய் மற்றும் மகளை போலீஸார் தேடி வந்த நிலையில், நேற்று முன்தினம் செனாய் நகர் பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட் டுள்ள சாந்தி மீது மது விற்பனை தொடர்பாக ஏற்கெனவே 9 வழக்குகளும், ராதிகா மீது 6 வழக்குகளும் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத மது விற்பனை: சென்னையில் தாய், மகள் கைது
தூத்துக்குடி - சென்னை இடையே இரவு விமான சேவை இன்று முதல் தொடக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in