தேசிய திரைப்பட விருதுகள் வென்ற தமிழ் கலைஞர்களுக்கு சரத்குமார் வாழ்த்து

நடிகரும் முன்னாள் எம்.பியுமான சரத்குமார்

நடிகரும் முன்னாள் எம்.பியுமான சரத்குமார்

Updated on
1 min read

சென்னை: தமிழ்த் திரையுலகின் படைப்பாற்றல், தொழில்நுட்பத் திறன் மற்றும் உலகத் தரத்திலான கலைச் சாதனைகளுக்கு கிடைத்துள்ள உயரிய மரியாதையாகும் என்று நடிகரும் முன்னாள் எம்.பியுமான சரத்குமார் கூறியுள்ளார்.

தேசிய விருதுகள் அறிவிப்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்: ”திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்த்த திரைக் கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்திய திரைப்படத் துறையின் உயரிய அங்கீகாரமான தேசிய திரைப்பட விருதுகளில், தமிழ்த் திரைப் படங்கள் மற்றும் கலைஞர்கள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பான வெற்றிகளைப் பெற்று தமிழ்த் திரையுலகிற்கு மீண்டும் பெருமை சேர்த்துள்ளனர்.

சிறந்த தமிழ்த் திரைப்படமாக 'ராயன்', சிறந்த நடிகர் (சிறப்புப் பிரிவு) (கேப்டன் மில்லர்), சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படமாக 'கேப்டன் மில்லர்' என தனது திரைப் பயணத்தில் அசாத்திய திறமையால் இதுவரை 5 முறை தேசிய விருதுகளை பெறும் பெருமைக்குரிய அன்புச் சகோதரர் தனுஷுக்கும், அமரன் திரைப் படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக தற்போது 3-வது முறையாக தேசிய விருது பெறும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும் வாழ்த்துகள்.

மேலும், சிறந்த இயக்குநராக ராஜ்குமார் பெரியசாமி (அமரன்), சிறந்த துணை நடிகையாக சாச்சனா நமிதாஸ் (மகாராஜா), சிறந்த படத்தொகுப்பிற்காக ஆர்.கலைவாணன் (அமரன்), சிறந்த சண்டைப் பயிற்சிக்காக அனல் அரசு (மகாராஜா), சிறந்த ஒலி வடிவமைப்பிற்காக டி.எஸ்.ஹரிஹர சுதன் (ப்ளூ – ஆவணப்படம்), சிறந்த ஒலிக் கலவை (சிறப்புப் பிரிவு) சுரேன் ஜி (மெய்யழகன்) ஆகியோர் விருது பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த அங்கீகாரங்கள், தமிழ்த் திரையுலகின் படைப்பாற்றல், தொழில்நுட்பத் திறன் மற்றும் உலகத் தரத்திலான கலைச் சாதனைகளுக்கு கிடைத்துள்ள உயரிய மரியாதையாகும். தேசிய திரைப்பட விருதுகளை வென்ற அனைத்து கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும், அவர்கள் மேலும் பல உயரிய சாதனைகளைப் படைத்து தமிழ்த் திரையுலகிற்கும், இந்திய சினிமாவிற்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று சரத்குமார் கூறியுள்ளார்.

<div class="paragraphs"><p><em>நடிகரும் முன்னாள் எம்.பியுமான சரத்குமார்</em></p></div>
ஜப்பான் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற பி.வி.சிந்து - ஜி.கே.வாசன் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in