‘க்ரீன் மேஜிக்’ பால் விநியோகம் நிறுத்தமா? - ஆவின் நிறுவனம் மறுப்பு

‘க்ரீன் மேஜிக்’ பால் விநியோகம் நிறுத்தமா? - ஆவின் நிறுவனம் மறுப்பு
Updated on
1 min read

சென்னை: ஆவின் நிறுவனத்தின் பச்சை நிற ‘க்ரீன் மேஜிக்’ பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்பட உள்ளதாக தகவல் பரவிய நிலையில், இதை ஆவின் மறுத்துள்ளது.

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தினமும் 34 லட்சம் லிட்டருக்கு மேல் பாலைக் கொள்முதல் செய்து பதப்படுத்தி பல்வேறு நிலைகளில் விநியோகம் செய்கிறது. இந்நிலையில், பச்சை நிற பால் பாக்கெட் டான ஆவின் ‘க்ரீன் மேஜிக்’ சமீபகாலமாக சரிவர கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், பச்சை நிற பால் பாக்கெட் விநியோகத்தைக் குறைத்து வருவதாகவும், இதன் விற்பனையை விரைவில் நிறுத்தஉள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

அதைத்தொடர்ந்து, பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்து வெளியிட்ட பதிவில், ‘‘தமிழகம் முழுவதும் ஆவின் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனை குறைக்கப்பட்டுள்ளதால் தனியார் பாலை ரூ.24 வரை கூடுதல் விலைக்கு வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட் டுள்ளனர். சென்னையில் மட்டும் நாள் ஒன்றுக்கு விற்பனையாகும் 14 லட்சம் லிட்டர் பாலில் அதிக பட்சமாக 7.5 லட்சம் லிட்டர் பச்சை நிற பாக்கெட் பாலாகும். தற்போது அதன் உற்பத்தி 3.5 லட்சம் லிட்டராக குறைக்கப்பட்டுள் ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகவும் பாதிக்கும்’ என்று தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று தவெக அரசு கூறியுள்ளது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது அரசு? எனவே, உடனடியாக, மீண்டும் போதுமான அளவு பச்சை நிற க்ரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், பச்சை நிற பால் பாக்கெட் விநியோகம் நிறுத்தப்படவில்லை என்று ஆவின் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆவின் பச்சை நிற பால் வகையான ‘க்ரீன் மேஜிக்’ பாலின்விநியோகம் நிறுத்தப்பட்டதா கவோ அல்லது கணிசமாகக் குறைக்கப்பட்டதாகவோ சில ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தவறானது. ஆவின் நிறுவனம் தனது அனைத்து பால் வகைகளையும், தொடர்ந்து வழக்கம்போல் விநியோகம் செய்கிறது. எந்தவொரு பால் வகையின் விநியோகமும் குறைக்கப்படவில்லை.

எனவே, பொதுமக்களும் நுகர்வோரும் இதுபோன்ற தவறான செய்திகளை நம்ப வேண்டாம். ஆவின் ‘க்ரீன் மேஜிக்’ பால் வழக்கம்போல எந்த வித தடங்கலும் இன்றி தொடர்ந்து விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

‘க்ரீன் மேஜிக்’ பால் விநியோகம் நிறுத்தமா? - ஆவின் நிறுவனம் மறுப்பு
அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் ஜூன் 14 கையெழுத்தாகிறது: ட்ரம்ப் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in