வயதான பெற்றோரை நம் சிந்தனை முறைக்கு மாற்றக் கூடாது: ஆர்த்தி வெற்றிமாறன் அறிவுறுத்தல்

‘அன்​பென்​றாலே அம்மா’ சிறப்பு இசை நிகழ்ச்சியில் பாடிய இசைக் கலைஞர் ஹரிஷுக்கு ட்ரை ஆரா நிறுவனத்தின் நிறுவனர் ஆர்த்தி வெற்றிமாறன் நினைவுப் பரிசு வழங்கினார். உடன் நடிகை சுஹாசினி மணிரத்​தினம், நடிகர் சேத்தன், இயக்குநர் தமிழ் ஆகியோர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

‘அன்​பென்​றாலே அம்மா’ சிறப்பு இசை நிகழ்ச்சியில் பாடிய இசைக் கலைஞர் ஹரிஷுக்கு ட்ரை ஆரா நிறுவனத்தின் நிறுவனர் ஆர்த்தி வெற்றிமாறன் நினைவுப் பரிசு வழங்கினார். உடன் நடிகை சுஹாசினி மணிரத்​தினம், நடிகர் சேத்தன், இயக்குநர் தமிழ் ஆகியோர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

Updated on
1 min read

சென்னை: சென்​னை​யில் நடந்த ‘அன்​பென்​றாலே அம்​மா’ நிகழ்ச்​சி​யில் பேசியட்ரை ஆரா நிறு​வன தலைவர் ஆர்த்தி வெற்​றி​மாறன், “வய​தான பெற்​றோரை நம் சிந்தனை முறைக்கு மாற்​று​வது நோக்​க​மா இருக்​கக்​கூ​டாது” என அறி​வுறுத்​தி​னார்.

தாய் என்ற உன்​னத​மான உறவை, தாய்​மையை போற்​றும் பாடல்​கள், நெகிழ்ச்​சி​யான உரை​யாடல்​கள் மற்​றும் மகிழ்ச்​சி​யான அனுபவப் பகிர்​வு​களு​டன் கொண்​டாடும் வகை​யில், ட்ரை ஆரா நிறு​வனம் சார்​பில் ‘அன்​பென்​றாலே அம்மா - அம்​மா... உறவல்​ல... உணர்​வு’ எனும் சிறப்பு இசை நிகழ்ச்​சி, சென்னை ஆர்​.ஏ.புரத்​தில் நேற்று நடை​பெற்​றது.

நிகழ்ச்​சியை ப்ளாக் ஷீப், நியூஸ் 7, சித்​திரம் தொலைக்​காட்​சி, பிக் எஃப்​.எம், சென்னை சாரீஸ், ப்ர​வோக் ஆகிய நிறு​வனங்​களும் இணைந்து வழங்​கின. பிரின்ட் பார்ட்​ன​ராக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இருந்​தது.

இந்த தனித்​து​வ​மான இசை நிகழ்ச்​சி​யில், தாய்​மை​யின் மேன்​மையை உணர்த்​தும் திரை​யிசை பாடல்​களை, சைந்​த​வி, நிவாஸ், ஷ்யாம் உள்​ளிட்ட பின்​னணிப் பாடகர்​களும், இனியா ராஜகு​மாரன், முத்​தமிழன், பிர​பாவதி உள்​ளிட்ட வளரும் இசைக் கலைஞர்​களும் பாடி பார்​வை​யாளர்​களை உணர்ச்​சிவசப்பட செய்​தனர்.

அதே​போல் சென்​னையை சேர்ந்த 8 தாய்​மார்​களின் ஃபேஷன் வாக் நிகழ்ச்​சி​யும் அங்​கிருந்​தோரை கவர்ந்​தது. நிகழ்ச்​சி​யில் கலந்துகொண்ட வழக்​கறிஞர் பேரறி​வாளன் மற்​றும் அவரது தாயார் அற்​புதம்​மாள் ஆகியோ​ருக்கு நினைவு பரிசு வழங்​கப்​பட்​டது.

நிகழ்ச்​சிக்கு தலைமை தாங்​கிய ட்ரை ஆரா நிறு​வனத்​தின் தலை​வர் ஆர்த்தி வெற்​றி​மாறன் பேசும்போது, “விலை உயர்ந்த பரிசுகளை​யோ அல்​லது குறிப்​பிட்ட இடைவெளி​யில் தொலை​பேசி மூலம் அவர்​களது நலனை விசா​ரிப்​ப​தையோ மட்​டும் வயதான பெற்​றோர்​கள் நம்​மிடம் எதிர்பார்ப்​ப​தில்​லை.

வயதான காலத்​தில் அவர்​கள் திரும்பத் திரும்ப சொல்​லும் கதைகளை ஆர்​வத்​துடன் கேட்​பதும், எவ்​வித​மான திட்​டமோ அல்​லது கால அட்​ட​வணை​யின்றி அவர்​களு​டன் நாம் நேரத்தை செல​விடவே அவர்​கள் விரும்​பு​கின்​றனர்.

வயதான நம் பெற்​றோரை நமது சிந்தனை முறைக்கு மாற்​று​வது நமது நோக்​க​மாக இருக்​கக்​கூ​டாது. இன்​றைய கால​கட்ட கண்​ணோட்​டத்​துக்கு ஏற்​ற​வாறு, அவர்​களது அனுபவத்தை மாற்றி எழுத​ முடி​யாது.

எனவே, அவர்​கள் மீது அன்​புட​னும், நன்றி உணர்​வுட​னும் இருப்​ப​தற்​காக நம் மனதை விழிப்​புணர்​வுடன் தயார்படுத்​திக் ​கொள்ள வேண்​டும்” என்று தெரி​வித்​தார்.

இந்​நிகழ்​வில் நேச்சுரல்ஸ் நிறு​வனர் சி.கே.குமர​வேல், வேல்டெக் கல்​லூரி தலை​வர் மகாலட்​சுமி ரங்​க​ராஜன், மேக்ஸ் கோல்டு நிறுவன தலை​வர் தாயார் லதா பாய், மகள் பூஜா ஜலகண்​டேஸ்​வர் ராவ், நடிகர்​கள் விக்​ராந்த், ஹரிஷ் கல்​யாண், சேத்​தன், நடிகைகள் சுஹாசினி மணிரத்​தினம், கவுதமி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

<div class="paragraphs"><p>‘அன்​பென்​றாலே அம்மா’ சிறப்பு இசை நிகழ்ச்சியில் பாடிய இசைக் கலைஞர் ஹரிஷுக்கு ட்ரை ஆரா நிறுவனத்தின் நிறுவனர் ஆர்த்தி வெற்றிமாறன் நினைவுப் பரிசு வழங்கினார். உடன் நடிகை சுஹாசினி மணிரத்​தினம், நடிகர் சேத்தன், இயக்குநர் தமிழ் ஆகியோர். | படம்: எஸ்.சத்தியசீலன் |</p></div>
போலீஸாரை தாக்கிய ரவுடி காலில் சுட்டுப் பிடிப்பு: தலைமை காவலருக்கு வெட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in