போலீஸாரை தாக்கிய ரவுடி காலில் சுட்டுப் பிடிப்பு: தலைமை காவலருக்கு வெட்டு

செல்வகு​மார், கனகராஜ்

செல்வகு​மார், கனகராஜ்

Updated on
1 min read

வண்​டலூர்: வண்​டலூர் ஓட்​டேரி காவல் நிலை​யத்​தின் ஏ+ சரித்​திரப் பதிவேடு குற்​ற​வாளி​ செல்​வ கு​மார் (33), கிளாம்​பாக்​கம் காவல் நிலைய ஏ+ சரித்​திரப் பதிவேடு குற்​ற​வாளி கனக​ராஜ் (33) ஆகியோர், கூட்​டாளி​யுடன் படப்பை அருகே கரசங்​கல் துண்​டல் கழனி பகு​தி​யில் பதுங்​கி​யிருப்​ப​தாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்​தது.

இதையடுத்​து, ஓட்​டேரி காவல் நிலைய உதவி ஆய்​வாளர் தலை​மையி​லான தனிப்​படை​யினர் அதி​காலை அங்கு சென்று சுற்​றிவளைத்தனர். அப்​போது ரவுடிகள் அரி​வாளு​டன் தாக்க முயன்​ற​தாக கூறப்​படு​கிறது.

இதில், தலை​மைக் காவலர் ஆனந்​தன் (45) காயமடைந்​தார். தற்​காப்பு நடவடிக்​கை​யாக உதவி ஆய்வாளர் சதீஸ்​கு​மார் துப்​பாக்​கி​யால் சுட்​ட​தில், செல்​வகு​மாரின் வலது காலில் குண்டு பாய்ந்​தது.

காயமடைந்த செல்​வகு​மாரை தாம்​பரம் அரசு மருத்​து​வ​மனைக்கு போலீஸார் அனுப்பி வைத்​தனர். மேலும் சம்பவ இடத்​தில் இருந்த கனக​ராஜை போலீ​ஸார் கைது செய்து அங்கிருந்த 21 கிலோ கஞ்சாவை பறி​முதல் செய்தனர்.

இதற்​கிடை​யில், இந்த வழக்​கில் தொடர்​புடைய அகஸ்​டின் என்​பவர் தப்​பியோடிய நிலை​யில், அவரை தேடி வரு​கின்​றனர். கஞ்சா வழக்​கு, ஆயுதங்​களு​டன் பதுங்​கியது, போலீ​ஸாரை தாக்க முயன்​றது உள்​ளிட்ட பல்​வேறு பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​து, போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரணை மேற்​கொண்டு வரு​கின்​றனர்.

<div class="paragraphs"><p>செல்வகு​மார், கனகராஜ்</p></div>
நியோமேக்ஸ் நிறுவன பங்குதாரர் காருடன் கடத்தல்? - 4 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in