நிலக்கரி ஊழல் குறித்து விரைவில் அறிக்கை: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தகவல்

ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனா

Updated on
1 min read

சென்னை: நிலக்கரி ஊழல், மின்மாற்றிகள் கொள்முதலில் நடந்த ஊழலே தற்போதைய மின்தடைக்கு காரணம். நிலக்கரி கொள்முதலில் நடந்துள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

​மாற்​றுக் கட்​சி​யினர் தவெக​வில் இணை​யும் நிகழ்ச்சி சென்னை பனையூரில் நேற்று நடை​பெற்​றது. இதில் பொதுப்​பணித் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா பேசி​ய​தாவது: நதி​கள் அனைத்​தும் கடலில் வந்து சேரு​வது​போல, தமிழகத்​தின் பல்​வேறு அரசி​யல் நீரோட்​டங்​களும் தற்​போது ‘தவெக’ எனும் கடலை நோக்​கி, எங்​களது தலை​வரை நோக்கி வந்து கொண்​டிருக்​கின்​றன. 70 ஆண்​டு​கால பாரம்​பரி​யம் மிக்க கட்சி என்று கூறிக்​கொள்​கிறது திமுக. ஆனால், சட்​டப்​பேர​வைத்தேர்​தலில் பெண்​கள், இளைஞர்​களின் பேராதர​வுடன் தவெக வெற்றி பெறப்​போவது​கூட அவர்​களுக்கு தெரிய​வில்​லை.

தமிழக மின்​துறை​யில் பெரும் ஊழல் நடந்​துள்​ளது. இந்த துறை​யில் 50 சதவீத பணி​யிடங்​கள் காலி​யாக உள்​ளன. கடந்த திமுக அரசு புதிய பணி​யாளர்​களை நியமிக்​க​வில்​லை. ஒவ்​வொரு தெரு​விலும் உள்ள மின்​மாற்​றிகளும் (டி​ரான்​ஸ்ஃ​பார்​மர்) தரமற்​றவை​யாக உள்​ளன. நிலக்​கரி கொள்​முதலில் டாலர்​களில் ஊழல் நடந்​துள்​ளது. மின்​துறையை அழித்​து​ விட்​டு, தனி​யாரிடம் அதிக விலைக்கு மின்​சா​ரம் வாங்​கி, துறையைக் கடனாளி ஆக்​கி​யுள்​ளனர்.

ஊழலில் ஊறிப்​போன செந்​தில் பாலாஜி​யிடம் மின்​துறை, மது​விலக்கு துறையைக் கொடுத்​தனர். அவர் பாட்​டிலுக்கு ரூ.10 கூடு​தலாகப் பெற்று மாதம் ரூ.1,500 கோடி வசூலித்​துள்​ளார். நிலக்​கரி ஊழல், மின்​மாற்​றிகள் கொள்​முதலில் நடந்த ஊழலே தற்​போதைய மின்​தடைக்கு காரணம். நிலக்​கரி கொள்​முதலில் நடந்​துள்ள பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குறித்த அறிக்கை விரை​வில் அமைச்​ச​ரால் வெளி​யிடப்​படும்.

அதி​முக​வில் இருந்து வந்​தவர்​களு​டன் இணைந்து இடைத்​தேர்​தல், உள்​ளாட்​சித் தேர்​தலை சந்​திப்​பது​தான் எங்​களது அடுத்த குறிக்​கோள். தவெக அமைச்​சர்​கள் ஒரு நாளுக்கு 18 மணி நேரம் உழைக்​கின்​றனர். கடந்த 50 ஆண்​டு​களில் எந்த தலை​வ​ராலும் செய்ய முடி​யாத ஊழல் ஒழிப்பை நாங்​கள் சாத்​தி​யப்​படுத்தி உள்​ளோம். அதி​முக​வினரை​விட தி​முக​வினரே அதிக மனச்​சோர்​வுடன் இருக்​கின்​றனர்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

<div class="paragraphs"><p>ஆதவ் அர்ஜுனா</p></div>
“என் செல்வாக்கை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்” - ட்ரம்புக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பதிலடி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in