

மதுரை: மல்யுத்த வீராங்கனைகளின் புகார் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புகாருக்குரிய நபரை கைது செய்தால்தான் போராட்டத்தை நிறுத்துவோம் என கூறுவது தவறு என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து இண்டிகோ மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: "சி.எஸ்.கே-வில் ஒரு தமிழர் கூட விளையாடவில்லை என்றாலும் அந்த அணியை எல்லாருக்கும் பிடிக்கும்" என்றார்.
மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் குறித்த கேள்விக்கு, "திமுக நண்பர்கள் வைரமுத்துவிடம் பாடகர் பாலியல் புகார் சம்பந்தமாக கேள்வி கேட்கட்டும். நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே எல்லா குற்றத்திற்கும் ஆதாரம் வேண்டும். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்தால் தான் போராட்டத்தை நிறுத்துவோம் என்பது தவறு" என கூறினார்.
நிதியமைச்சர் பி.டி.ஆரின் ஒளிப்பதிவை அடுத்து, இலக்கா மற்றும் செய்தது குறித்த கேள்விக்கு, "பி.டி.ஆர் அமைச்சரவை மாற்றம் செய்தது மதுரைக்கும், மதுரை மக்களுக்கும் செய்த துரோகம். ஐடி அதிகாரிகள் தாக்குதல் சம்பந்தமாக காவல் துறையினர் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
வெளிநாட்டில் பயின்ற மருத்துவ மாணவர்களின் கல்விக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்விக்கு, "வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் படிக்க வேண்டும் என்றால் முதலில் மாநிலங்கள் முன் வரவேண்டும். வெளிநாட்டில் இருந்து மாணவர்களை கொண்டு வந்திருக்கிறோம். இதற்கு ஒரு தீர்வை கண்டுபிடிப்போம்" என தெரிவித்தார்.
வெளிநாட்டில் இந்தியாவின் Brand மோடி, அதனை பயன்படுத்தி தமிழகத்திற்கு முதலீடு வாய்ப்பை ஈர்த்து வரவேண்டும். தமிழகத்திற்கு ஆக்கபூர்வமான விஷயங்களை முதல்வர் கொண்டு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். காந்தி குடும்பத்திற்கு செங்கோலை இழிவு படுத்துவது தொடர் கதையாக உள்ளது. அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோவுக்கு சென்று செங்கோலை இழிவு படுத்துகின்றனர்" என அண்ணாமலை கூறியுள்ளார்.