அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை

அமைச்சர் செந்தில் பாலாஜி | கோப்புப் படம்
அமைச்சர் செந்தில் பாலாஜி | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அவரது சகோதரர் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை, கரூர், கோவை, பெங்களூரு, ஹைதராபாத், கேரள மாநிலம் பாலக்காடு உள்ளிட்ட ஊர்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது. மாநகராட்சி மேயர் கவிதா உள்ளிட்ட திமுவினர் அங்கே திரண்டதால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் செந்தில் கார்த்திகேயனின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

ஏற்கெனவே, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

அதேபோல் அண்மையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்க பரிந்துரைக்குமாறு வலியுறுத்தி மனு கொடுத்தார்.

இந்நிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜி அவரது சகோதரர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் சோதனை: அதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களிலும் டாஸ்மாக் ஒப்பந்ததாரர்கள் வீடுகளிலும் வருமானவரித் துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in