10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு |  9,703 மாற்றுத் திறனாளிகள், 112  சிறைக் கைதிகள் தேர்ச்சி

தேர்வு எழுதிய சிறைக் கைதிகள்
தேர்வு எழுதிய சிறைக் கைதிகள்
Updated on
1 min read

சென்னை: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 9,703 மாற்றுத் திறனாளிகள் மற்றும் 112 சிறைக் கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இதன்படி, மொத்தம் தேர்வு எழுதிய 9,14,320 மாணவ, மாணவியர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.39, இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,30,710. மாணவர்களின் எண்ணிக்கை 4,04,904, மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.66. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.16 மாணவர்களை விட மாணவியர்கள் 6.50 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்

இந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை 10,808 மாற்றுத் திறனாளி மாணவர்கள் எழுதினர். இதில் 9,703 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 89.77. சிறைக் கைதிகளில் தேர்வு எழுதிய 264 பேரில், 112 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 42.42.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in