Published : 17 May 2023 06:43 AM
Last Updated : 17 May 2023 06:43 AM

தந்தையின் இறப்பு சான்றிதழக்கு தாலியை கொடுத்த மகள் - செய்யாறு துணை வட்டாட்சியர் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை: தந்தையின் இறப்பு சான்றிதழ் வழங்க மறுத்ததால் தாலி மற்றும் கம்மலை மகள் கொடுத்த காட்சிகள் வெளியானதால் செய் யாறு வட்டாட்சியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட் சியர் வெங்கடேசனை பணியிடை நீக்கம் செய்து சார் ஆட்சியர் அனாமிகா உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த இளநீர் குன்றம் கிராமத்தில் வசித்தவர் பரசுராமன். இவர், கடந்த 1972-ல் உயிரிழந்துள்ளார். இவருக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு, செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் அவரது மகள் திலகவதி கடந்தாண்டு ஜுன் மாதம் விண்ணப்பித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்குமாறு, செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகம் மூலம் கடந்தாண்டு நவம்பர் மாதம் விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்சேபம் தெரிவித்து யாரும் முறையீடு செய்யவில்லை என கூறப்படுகிறது.

இருப்பினும், இறப்பு சான்றிதழ் வழங்கு வதற்கான அடுத்தக்கட்ட பணியை மேற்கொள்ளாமல் வருவாய்த் துறை மெத்தனமாக இருந்துள்ளது. சார் ஆட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு திலகவதி அலைக்கழிக்கப்பட்டு வந்துள்ளார்.

சமூக வலைதளத்தில் வைரல்: இதனால் விரக்தி அடைந்த திலகவதி, செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கடந்த 11-ம் தேதி சென்று, என்னிடம் பணம் இல்லை, எனது தாலி மற்றும் கம்மல் ஆகியவை மட்டுமே உள்ளது. இதனை பெற்றுக் கொண்டு எனது தந்தைக்கு இறப்பு சான்றிதழ் வழங்குங்கள் என கேட்டுள்ளார்.

இந்த காட்சி, சமூக வலைதளத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் பரவியது. வருவாய்த் துறையின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து, திலகவதியின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில், செய்யாறு வட்டாட்சியர் அலுவலக தலைமை யிடத்து துணை வட்டாட்சியர் டி.வெங்கடேசனை, சார் ஆட்சியர் அனாமிகா பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவில், “செய்யாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் திலகவதி என்பவர், கடந்த 11-ம் தேதி தன்னிடம் உள்ள நகைகளை வைத்துக்கொண்டு, தனது தந்தையின் இறப்பு சான்று வழங்குமாறு கோரிக்கை விடுத்த காணொளி சமூக வலைதளம் மற்றும் ஊடகங் களில் வெளியானது.

இது தொடர்பாக திலகவதி, செய்யாறு வட்டாட்சியர், தலைமையிடத்து துணை வட்டாட்சியர், சார் ஆட்சி யரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் முது நிலை வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் விரிவான விசாரணை நடத்தப்பட்டு வாக்கு மூலம் பெறப்பட்டது.

சான்றிதழ் வழங்கப்பட்டது: விசாரணையின் முடிவில் செய்யாறு தலைமையிடத்து துணை வட்டாட்சியர் டி.வெங்க டேசனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மனுதாரர் திலகவதிக்கு, அவரது தந்தை பரசுராமனின் இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x