Published : 01 May 2023 07:03 AM
Last Updated : 01 May 2023 07:03 AM
சென்னை: ரயில் நிலையங்கள் வருவாய்,பயணிகள் வருகை அடிப்படையில் தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர, பயணிகள் அதிக மாக வரும் ரயில் நிலையங்களை அடையாளம் கண்டு, அவற்றை மேம்படுத்தும் நடவடிக்கையில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
தெற்கு ரயில்வே தரவரிசை பட்டியலின்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் 2022-23-ம் நிதியாண்டில் ரூ.1.085 கோடி வருவாய் ஈட்டி முதல் இடத்தையும், எழும்பூர் ரயில் நிலையம் ரூ.525.96 கோடிவருவாய் ஈட்டி 2-வது இடத்தையும் பிடித்துள்ளன.
2022-23-ம் நிதியாண்டில், தெற்குரயில்வேயில் அதிக வருவாய்ஈட்டிய முதல் 50 நிலையங்கள் பட்டியலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது. கோயம்புத்தூர் ரயில்நிலையம் ரூ.283.36 கோடி வருவாய்ஈட்டி 3-வது இடத்தையும், திருவனந்தபுரம் ரயில் நிலையம் ரூ.205.81 கோடியும், எர்ணாகுளம் ரயில் நிலையம் ரூ.193 கோடியும் ஈட்டி முறையே 4-வது, 5-வது இடத்தையும் பெற்றுள்ளன.
மதுரை சந்திப்பு ரூ.190.76 கோடிஈட்டி 6-வது இடத்தையும், தாம்பரம் ரயில் நிலையம் ரூ.182.68 கோடியுடன் 7-வது இடத்தையும் பிடித்துள்ளன. காட்பாடி ரூ.168.39 கோடியுடன் 8-வது இடத்தையும், திருச்சிராப்பள்ளி ரூ.140.24 கோடியுடன் 10-ம் இடத்தையும் பிடித்தன.
இந்த நிலையங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று ஒரு ரயில்வே அதிகாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT