அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தினால் சட்ட நடவடிக்கை: செம்மலை தகவல்

சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள  எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் செம்மலை மற்றும் கட்சியினர்.
சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் செம்மலை மற்றும் கட்சியினர்.
Updated on
1 min read

சேலம்: அதிமுக கொடியையும், சின்னத்தையும் ஓபிஎஸ் பயன்படுத்தினால், அவர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும், என முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளராக, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததையடுத்து, சேலம் மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு முன்னாள் அமைச்சர் செம்மலை தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் செம்மலை செய்தியாளர்களிடம் கூறியது: அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கட்சி, சின்னத்தை அவர்வசம் தேர்தல் ஆணையம் ஒப்படைத்துள்ளதால், இனி யாரும் கட்சியை சொந்தம் கொண்டாட முடியாது. அதிமுக கொடி, சின்னத்தை கட்சிக்கு அப்பாற்பட்டு யாராவது பயன்படுத்தினால், அவர்கள் மீது கட்சியின் சார்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.

வலுவான கட்சியாக பழனிசாமி தலைமையில் அதிமுக உருவெடுத்துள்ளது. இனி கட்சியை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட மாட்டார்கள் என நம்புகிறேன். அதிமுக கொடியையும், சின்னத்தையும் ஓபிஎஸ் பயன்படுத்தினால், அவர் மீது சட்டப் பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். இனி அவர்கள் அந்த காரியத்தை செய்ய மாட்டார்கள் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in