Published : 20 Apr 2023 05:54 AM
Last Updated : 20 Apr 2023 05:54 AM
சென்னை: தினத்தந்தி அதிபர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-வது நினைவு நாளை முன்னிட்டு, தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசைபுகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "விளையாட்டுத் துறையில் இளைஞர்களை ஊக்குவித்தது, ஊடகத் துறையில் இளைஞர்களுக்கு சரியான பங்கைஅளித்தது, ஆன்மிகத் துறையில் சேவையாற்றுவது ஆகியவற்றில் சிவந்தி ஆதித்தனார் நிகரற்றவராகத் திகழ்ந்தார். அவரது பெருமைகளை நினைவுகூர்ந்து, அவருக்கு மரியாதை செலுத்துவதில் நான் பெருமை கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்களும் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு இல்லத்தில், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, வைகை செல்வன், மத்திய முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த், திமுக வர்த்தகர் அணிச் செயலாளர் காசி முத்து மாணிக்கம், தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன், செயலாளர் கராத்தே தியாகராஜன், தமாகா தலைமை நிலையச் செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, மத்திய முன்னாள் இணையமைச்சர் ஏ.கே.மூர்த்தி, முன்னாள் அமைச்சர்ஜி.செந்தமிழன், அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி, நாம் தமிழர் கட்சியின் தலைமைஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT