காவிரியில் முழ்கி உயிரிழந்த 4 கல்லூரி மாணவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

காவிரியில் முழ்கி உயிரிழந்த 4 கல்லூரி மாணவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: காவிரி ஆற்றில் முழ்கி உயிரிழந்த 4 கல்லூரி மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா, கல்வடங்கம் கிராமத்தில் ஓடும் காவிரி ஆற்றில் இன்று குளிக்கச் சென்ற தனியார் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்கள் மணிகண்டன், த/பெ.மணி (வயது 20), முத்துசாமி, த/பெ.செல்வம் (வயது 20), மணிகண்டன் (வயது 20) மற்றும் பாண்டியராஜன் (வயது 20) ஆகியோர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். | விபத்து குறித்த விரிவான தகவல் > சேலம்: காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in