தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கில் அரசு கவனம் செலுத்த வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் - ஒழுங்கில் முதல்வர் கவனம் செலுத்த வேண்டும் எனபாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: விழுப்புரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் படம் பொறித்த பனியன் அணிந்த திமுக ரவுடிகள், பட்டப்பகலில் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து இப்ராஹிம் ராஜா என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.

இன்னொரு கடையிலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். ஆனால், சட்டபேரவையில் குடும்பச் சண்டை என்று முதல்வர் விளக்கம் கொடுத்திருக்கிறார். குற்றவாளிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல், ஒவ்வொரு குற்றச் சம்பவங்களும், குடும்பச் சண்டை என்ற அளவில் குறைத்துக் காட்டப்பட்டு வருகிறது.

ஆட்சியில் உள்ள மிதப்பில் தொடர்ந்து திமுகவினர் ஈடுபடும் கொலை உள்ளிட்ட குற்றங்களை குடும்பச்சண்டை என்று முதல்வர் கடந்து செல்ல முடியாது. பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதுகாப்புமில்லாமல், சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும். மேலும், கட்டுப்பாடின்றி அராஜ கங்கள் செய்து வரும் திமுக கட்சிக்காரர்களைக் கட்டுப்படுத்தியும் வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in